Sunday, August 2, 2015

என் மகள் எயினி



பத்து மாதம்
பக்குவமாய் நான் சுமந்த
மரகதமே !!
எயினி என்றே
பெயரிட்டோம் உனக்கு
எயினி எனின்
பாலை நிலத் தலைவியாம்!!
தலைவியாய் தமிழ்ச் சமுதாயத்திற்கு
உழைத்திட வேண்டுமம்மா நீ !!
தந்தை பெரியாரின்
அடிச்சுவட்டில் அடிபிறழாது
நடந்திட வேண்டுமம்மா நீ !!
கடவுளும் மதமும் சாதியும்
அழித்தொழித்து சமத்துவ
சமுதாயத்தின் விடிவெள்ளியாய்
உயர்ந்திட வேண்டுமம்மா நீ !!
மக்களை முடக்கிடும்
மூடநம்பிக்கை தனை
முழுவதுமாய் புறந்தள்ளி
பெண்ணினத்தின் பகுத்தறிவு
வேங்கையாய் வளர்ந்திட
வேண்டுமம்மா நீ !!
மெல்லிய குணம் தவிர்த்து
வல்லின மனம் கொண்டோலாய்
உன்னை வார்த்திட வேண்டுமம்மா நீ !!
பகுத்தறிவு பகலவனின் வழியில்
தொண்டாற்றிட வேண்டுமம்மா நீ !!
அறிவே உன் ஆயுதமாய் கொண்டு
பெற்றிடு வெற்றிகள் பல!!