என் மனதின் அடி ஆழம்வரை
சென்றுப் பார்த்தாலும்
எங்கும் தெரிவது
உன் நிறம் தான்!
என் நரம்புகளின் நாணங்களிலும்
உன் ஓட்டம் தான்!
என் நகங்களிலும் உன் சாயம் தான்!
என் உள்ளங்கையிலும் உன் நிழல் தான்!
நீ இல்லாவிடில் என் உயிர் நில்லாது!
நீ இயங்காவிடில் என் இயக்கம் இல்லை!
நீ தான் என் உயிர் துடிப்பின் நீரோட்டம்!
நீ இல்லையேல் என் கண்களில் ஒளியில்லை!
நீ இல்லையேல் என் உடலில் சக்தியில்லை!
நீ இல்லையேல் என் வாழ்வில் இனிமை இல்லை!
எனக்கு மட்டும் இல்லாது தேவைப்படுகையில்
மற்றவருக்கும் உயிரளிக்கும் மாமருந்தே!
உயிர் துடிப்பின் மூலமே!
தானத்தில் சிறந்த தானமே!
எவர் உடம்பிலும் ஒரே நிறமாய்ஓடிடும் குருதியே!
நீ வேண்டும் என் உயிர் செழித்திட!!
This Poem says about the importance of hemoglobin content(blood) in one's life.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அறிவியலை (குருதியை) காதலோடு நோக்கும் உங்கள் பார்வை புதிது... தொடரட்டும்.
நன்றி அய்யா :)
Post a Comment