துளி துளி மழையில்
துள்ளி ஓட ஆசை
துள்ளுகையில் உன்
கை பிடிக்க ஆசை
பிடித்த கைதனில் மழைத்துளியாய்
முத்தமிட ஆசை
மழை தந்த குளிரின்
நடுக்கத்தில் உனை
கட்டியணைக்க ஆசை
உன் சுவாசத்தின் வெப்பத்தில்
எனை மறக்க ஆசை
உன் உயிரில் கரைந்து
எனை தேடிட ஆசை
உன் மடி உறங்கி
எழுந்திட ஆசை
மரணத்திலும் உன்
அரவணைப்பில் மடிய ஆசை
No comments:
Post a Comment