அரசக் குழந்தைப் பற்றி ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன !!
இங்கு
இருக்கும் பலர் அது என்ன அரச குடும்ப குழந்தை என்றால் இரண்டு கொம்புகள்
இருக்கின்றனவா ? ஏன் இவ்வளவு விளம்பரம்? இந்த காலத்திலும் அரச குழந்தை ,
"ராயல் பேபி" என்பதெல்லாம் சுத்த பிதற்றலாக இருக்கின்றதே என்று இந்தியாவில் நிறைய புலம்பல்கள் கேட்கின்றது...
என்னே
வியப்பு? இந்தியாவில் இந்த சிந்தனையா ? நம் குருதியில் இந்த முற்போக்கு
சிந்தனை ஓட்டமா?? எப்படி ?? ஓ !! வெள்ளைக்காரன் நமை அடிமையாக 200 ஆண்டுகள்
வைத்திருந்தானே அந்த காரணமா ?? மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆனால் ஒரு கேள்வி...
இங்கலாந்தில் பரப்படும் இந்த செய்திகளுக்கு கேள்வி கேட்கும் தமிழன்,
ஏன் 2000 ஆண்டுகளாக பார்ப்பானுக்கு மட்டும் அடிமையாய் இருக்கும் அவலத்தினை கேட்க வாய் எழவில்லை ?
முகத்தில் பிறந்தவன் பார்ப்பான் என்றால் அவனுக்கு கூழை கும்பிடு போடுகின்றாய்;
நாம் சூத்திரன் என்றால் பல்லை இளித்துக்கொண்டு காலில் விழுந்து சாமி என்கின்றாய்;
பூணூல் போட்டுக்கொண்டு தான் உயர்ந்தவன் என்று இந்த நாட்டில் இன்றும் துணிச்சலாக பார்ப்பன் திரிகின்றான் ,
அதை தட்டிக்கேட்க நமக்கு நா பிறழவில்லை , இங்கிலாந்து அரச குழந்தை என்ன சிறப்பானதா என்று வாய் கிழிய பேசுகின்றோம் !!
என்று
பூணூல் போடும் பார்ப்பனை பார்த்து உனக்கு எதுக்குடா பூணூல் , நீ என்ன
உயர்வு?? மக்களில் அனைவரும் சமம், என்று அவன் பூணூல்தனை அறுத்து எடுத்துவிட்டு
பிறகு இங்கிலாந்தில் நடப்பதை பற்றி விமர்சிக்கலாம் தோழர்களே !!
- கனிமொழி