Monday, March 16, 2015

அழியா தொண்டறச் செம்மல் வாழ்கவே!!



பெரியாரின் கைத்தடியே
புரட்சிப் பெட்டகமே!!

அவதூறுகள் உனை
அவமானப் படுத்தவில்லை;
மாறாக தூற்றியவர்களை
அவமானப்பட வைத்ததுக் காலம்!!

ஈரோட்டின் ஈடில்லாத் தொண்டினைத்
தமிழ்ச் சமூகம் பெற்றிட
அய்யாவை காத்திட்ட
அன்னையே!!

உலக வரலாற்றில்
நாத்திக இயக்கத்தின்
தலைவியாய் இருந்திட்ட
வீரத்தாய் நீவிர்! !

தோற்றத்தில் எளிமை
மனதிற்கண் போராட்டக்குணம்
கொண்ட புரட்சித் தலைவி நீவிர்!!

அய்யாவின் மறைவிற்குப்பின்
ஆரியக் கோட்டான்களின்
பிடறியில் அடித்து
இராவணலீலா நடாத்திக் காட்டிய
கொள்கைச் செம்மல் நீவிர்! !

திராவிடர் இயக்க வரலாற்றின்
அழியா தொண்டறச் செம்மல்
நீவிர் வாழ்கவே!!                                           -                 ம.வீ. கனிமொழி 

No comments: