அம்மா என்ற சொல் இங்கு மகனுக்கான அம்மாவாக மட்டுமே பார்க்கப்படுகின்றது!!
எந்த கலை வடிவமாக இருந்தாலும் பெரும்பான்மை ஆண்களின் கைகளில் இருப்பதால் இந்த நிலை. முகநூலும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
மகளுக்கும் அம்மா உண்டு என்பதை மறக்கும் ஆணாதிக்க இந்திய சமூகத்தில் கலைகளும் அந்த நிலையிலேயே இருக்கின்றது!!
அனைத்து பெண் விலங்கினமும் கடினப்பட்டே குட்டிகளை ஈன்று எடுக்கின்றது அதற்கு தனியாய் இயங்கும் ஆற்றலைக் கற்றுத் தருகின்றது!!
ஆனால் மனித இனத்தில் மட்டும் தான் அதுவும் ஆணுக்கான அம்மாக்கள் மட்டும் தான் தியாகம் செய்கின்றனர்
பிள்ளைக்கு சோறு ஊட்டுகின்றனர் தூங்க வைக்கின்றனர் என்பது போன்ற கட்டமைப்பு!!
இதற்கு முக்கிய காரணம் அம்மா என்ற சொல்லின் புனிதம் என்ற கற்பிதம். இது ஆண் சமூகம் செய்யும் சூழ்ச்சிகளில் ஒன்று!!
அம்மா என்றால் சும்மா இல்லடா என்பதில் தொடங்கி பல பல போலி புனிதங்கள் அம்மா என்ற சொல் மீது இங்கு கட்டமைக்கப்படுகின்றது!!
அம்மா என்ற சொல்லின் புனிதத்திற்கு பின் மிகப் பெரிய அரசியல் இருக்கின்றது!!
ஒரு பெண்னை அவள் தனி மனிதம் என்பதை மறைத்து பிள்ளைகளுக்காக அனைத்தையும் தன் சுய அடையாளத்தை தொலைத்து இருக்கவே பயன்படுத்தப்படுகின்றது!!
பசி,காமம் போன்று தாய்மை உணர்வு என்பது இயற்கையானது இல்லை. சமூக கட்டமைப்பே அதை வெறும் பெண்ணுக்கான இன்றியமையா தேவையாக வைத்திருக்கின்றது!!
அம்மா என்பவர் மதிப்பிற்குரியவர் எனின் இருபாலரின் அம்மாவும் மதிக்கப்படவேண்டியவர்களே!! ஆணின் அம்மா மிக மதிப்பிற்குரியவராய் கட்டமைக்கப்பட்டதின் விளைவே பெண் சிசுக் கொலையின் ஒரு காரணம்!!

No comments:
Post a Comment