Sunday, October 11, 2015

சிந்தனை செய் மனிதா !!

சிந்தனை செய் மனிதா !!




சிந்தனை செய் மனிதா 
பகுத்தறிவு கொண்டே
சிந்தனை செய் மனிதா !!

உணவளிப்பவன் கடவுள் எனின்
சோமாலியா நாட்டின் எல்லையில்
தூங்கி விட்டானா அவன் ?
என்றே சிந்தனை செய் மனிதா !!

ஏவுகணை விடும் நாளில்
ராவு காலம் என்பது உண்டா
என்றே சிந்தனை செய் மனிதா!!

வான்  கடவுளின் வீடு எனின்
ஓசோனில் ஓட்டை விழும் வரை
வேடிக்கை பார்த்தானா கடவுள்
என்றே சிந்தனை செய்
மனிதா !!

ஈழத்தில் பாலஸ்தீனத்தில்
ஈரானில் ஆப்கானிஸ்தானில்
ஈவு இரக்கமின்றி கொத்துக்கொத்தாய்
மனித உயிர்கள் கொல்லப்படுகையில்
கதைத்துக்  கொண்டிருந்தானா
கடவுள் என்றே சிந்தனை செய் மனிதா !!

பாலியல் வன்கொடுமை நடந்திடும்
நேரம் அங்கிங் கெனாதபடி
எங்கும் நிறைந்தவன்
பிடில் வாசித்துக் கொண்டிருந்தானா
என்றே சிந்தனை செய் மனிதா!!

தான்தோன்றிக் கடவுள்
தண்டவாளத்தில் இளவரசனும் - கோகுல்ராசும்
தலைக் கொய்து
கிடந்த போது தண்டச்சோறு
தின்றுக் கொண்டிருந்தானா
என்றே சிந்தனை செய் மனிதா !!

பரிணாமக் கொள்கை புரிந்து விடும்
மூளையின் மடிப்புகளில் படிந்திருக்கும்
மூடத்தனத்தை அகற்றினால்;
எனவே சிந்தனை செய் மனிதா !!

தூணிலும் துரும்பிலும் கடவுள் இல்லை
எங்கெங்கும் கரப்பான் தான் உண்டு
எனவே சிந்தனை செய் மனிதா !!

பகுத்தறிவு கொண்டே சிந்தனை செய்தால்
கடவுள் எனும் பொய்க் கற்பிதம்
வஞ்சகரின் சூழ்ச்சியால் வந்ததே
என்ற ஈரோட்டுத்  தந்தையின்
தத்துவம்  புரிந்திடுமே !!
மூடத்தனத்தின் தீச்செயல்
யாவும் நீங்கிடுமே !!

- வழக்கறிஞர்  ம .வீ . கனிமொழி

Sunday, August 2, 2015

என் மகள் எயினி



பத்து மாதம்
பக்குவமாய் நான் சுமந்த
மரகதமே !!
எயினி என்றே
பெயரிட்டோம் உனக்கு
எயினி எனின்
பாலை நிலத் தலைவியாம்!!
தலைவியாய் தமிழ்ச் சமுதாயத்திற்கு
உழைத்திட வேண்டுமம்மா நீ !!
தந்தை பெரியாரின்
அடிச்சுவட்டில் அடிபிறழாது
நடந்திட வேண்டுமம்மா நீ !!
கடவுளும் மதமும் சாதியும்
அழித்தொழித்து சமத்துவ
சமுதாயத்தின் விடிவெள்ளியாய்
உயர்ந்திட வேண்டுமம்மா நீ !!
மக்களை முடக்கிடும்
மூடநம்பிக்கை தனை
முழுவதுமாய் புறந்தள்ளி
பெண்ணினத்தின் பகுத்தறிவு
வேங்கையாய் வளர்ந்திட
வேண்டுமம்மா நீ !!
மெல்லிய குணம் தவிர்த்து
வல்லின மனம் கொண்டோலாய்
உன்னை வார்த்திட வேண்டுமம்மா நீ !!
பகுத்தறிவு பகலவனின் வழியில்
தொண்டாற்றிட வேண்டுமம்மா நீ !!
அறிவே உன் ஆயுதமாய் கொண்டு
பெற்றிடு வெற்றிகள் பல!!

Monday, May 25, 2015

அம்மா!!

அம்மா என்ற சொல் இங்கு மகனுக்கான அம்மாவாக மட்டுமே பார்க்கப்படுகின்றது!!
எந்த கலை வடிவமாக இருந்தாலும் பெரும்பான்மை ஆண்களின் கைகளில் இருப்பதால் இந்த நிலை. முகநூலும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
 மகளுக்கும் அம்மா உண்டு என்பதை மறக்கும் ஆணாதிக்க இந்திய சமூகத்தில் கலைகளும் அந்த நிலையிலேயே இருக்கின்றது!!

அனைத்து பெண் விலங்கினமும் கடினப்பட்டே குட்டிகளை ஈன்று எடுக்கின்றது அதற்கு தனியாய் இயங்கும் ஆற்றலைக் கற்றுத் தருகின்றது!!

ஆனால் மனித இனத்தில் மட்டும் தான் அதுவும் ஆணுக்கான அம்மாக்கள் மட்டும் தான் தியாகம் செய்கின்றனர்
பிள்ளைக்கு சோறு ஊட்டுகின்றனர் தூங்க வைக்கின்றனர் என்பது போன்ற கட்டமைப்பு!!

இதற்கு முக்கிய காரணம் அம்மா என்ற சொல்லின் புனிதம் என்ற கற்பிதம். இது ஆண் சமூகம் செய்யும் சூழ்ச்சிகளில் ஒன்று!!

அம்மா என்றால் சும்மா இல்லடா என்பதில் தொடங்கி பல பல போலி புனிதங்கள் அம்மா என்ற சொல் மீது இங்கு கட்டமைக்கப்படுகின்றது!!

அம்மா என்ற சொல்லின் புனிதத்திற்கு பின் மிகப் பெரிய அரசியல் இருக்கின்றது!!

ஒரு பெண்னை அவள் தனி மனிதம் என்பதை மறைத்து பிள்ளைகளுக்காக அனைத்தையும் தன் சுய அடையாளத்தை தொலைத்து இருக்கவே பயன்படுத்தப்படுகின்றது!!

பசி,காமம் போன்று தாய்மை உணர்வு என்பது இயற்கையானது இல்லை. சமூக கட்டமைப்பே அதை வெறும் பெண்ணுக்கான இன்றியமையா தேவையாக வைத்திருக்கின்றது!!

அம்மா என்பவர் மதிப்பிற்குரியவர் எனின் இருபாலரின் அம்மாவும் மதிக்கப்படவேண்டியவர்களே!! ஆணின் அம்மா மிக மதிப்பிற்குரியவராய் கட்டமைக்கப்பட்டதின் விளைவே பெண் சிசுக் கொலையின் ஒரு காரணம்!!


Tuesday, March 31, 2015

பார்ப்பானை நம்பாதே தமிழா!!

சிண்டு முடிவான் பார்ப்பான்
நேரடி பதில் தரான் பார்ப்பான்
மனுவின் காலம் திரும்பாத எனப் பார்ப்பான்
பூணூலை நீவி உலா வரப் பார்ப்பான்
மீண்டும் நமை அடிமையாக்கிட பார்ப்பான்
அதிகாரம் கொண்டு நமை ஆளப் பார்ப்பான்
சூழ்ச்சியால் நமை பிரித்திட பார்ப்பான்
மதக் கலவரம் மூட்டப் பார்ப்பான்
சாதிச் சண்டை வாராதா எனப் பார்ப்பான்
தமிழ் மடியாதா எனப் பார்ப்பான்
தமிழினம் ஒழியாதா எனப் பார்ப்பான்
திராவிடத்தை ஒழிக்கப் பார்ப்பான்
பார்ப்பனியம் காப்பான் பார்ப்பான்
பார்ப்பானை நம்பாதே தமிழா!!


Monday, March 16, 2015

அழியா தொண்டறச் செம்மல் வாழ்கவே!!



பெரியாரின் கைத்தடியே
புரட்சிப் பெட்டகமே!!

அவதூறுகள் உனை
அவமானப் படுத்தவில்லை;
மாறாக தூற்றியவர்களை
அவமானப்பட வைத்ததுக் காலம்!!

ஈரோட்டின் ஈடில்லாத் தொண்டினைத்
தமிழ்ச் சமூகம் பெற்றிட
அய்யாவை காத்திட்ட
அன்னையே!!

உலக வரலாற்றில்
நாத்திக இயக்கத்தின்
தலைவியாய் இருந்திட்ட
வீரத்தாய் நீவிர்! !

தோற்றத்தில் எளிமை
மனதிற்கண் போராட்டக்குணம்
கொண்ட புரட்சித் தலைவி நீவிர்!!

அய்யாவின் மறைவிற்குப்பின்
ஆரியக் கோட்டான்களின்
பிடறியில் அடித்து
இராவணலீலா நடாத்திக் காட்டிய
கொள்கைச் செம்மல் நீவிர்! !

திராவிடர் இயக்க வரலாற்றின்
அழியா தொண்டறச் செம்மல்
நீவிர் வாழ்கவே!!                                           -                 ம.வீ. கனிமொழி 

Sunday, March 8, 2015

Women's Day!!

March 8 th women's day... we exchange wishes celebrate women on this day alone leaving women in world of disrespect, fear giving her pain and agony all the year round.
Women have left their footprints of success in the pages of history with lot of hardwork,  embrassment, agony, disrespect. The success women got were not by walking in bed of roses but path of thorns.

Even today can we admit wholeheartedly that women are liberated from the chains of slavery. Yes they are educated. But how many of them are able to choose their education and profession as per their wish. They are denied higher education saying that it is hard to find a groom. Even if they complete graduation they have to choose work keeping family and kids in mind. A women cannot chase her dreams all alone . She is compelled to compromise or destroy her dreams or if she has to make her dreams come true she has to chase it with burden of family responsibilities. Else she will be questioned of her responsibility as a women.

The institution of marriage is nothing but breeding ground for domestic violence against women. It is said a person cannot good to be everyone; if they are then they are living on compromises. But a woman is expected to be good and satisfy all needs of members of husband's family. Is this not a great injustice we are doing to women folk? If she raise her voice against suppression then she is termed as a woman not fit for family .

Apart from home the society is constantly tormenting a women. How a woman should talk, laugh, eat; what a women should wear, how to wear everything is being decided by the male dominated society. If she is molested it is her fault, fault in her dress, fault of her coming out at nights and what not. No member of the society are worried about atrocious male chauvinist attitude.  What kind of society we live in? Two year girl babies being raped, school going girls raped by male teacher. Do they have to say that two year girl child seduced thirty year old man ? It is the rotten minds of men treating a woman or ogling at her as a sex chattel.

We teach a girl child all morals but what kind of morals we teach boy child at home? Are we teaching them to respect a girl ? Are we teaching them pain a girl undergoes during her mensus? Are we laying restrictions to a boy's behaviour to their opposite sex? Without moulding the character of a boy at home how are we just finding fault with girls? These mistakes we do at home in bringing up a boy child makes them a man of male chauvinist attitude.

There are still more Nirbhayas being raped every 20 minutes in India. Women are not treated equal to man by any religion. Manu says that a women has to depend her father when young, her husband after marriage, sons at her old age.
Christianity says that a women is made out of ribs of a man.
Islam says a woman has to cover her face and entire body.

Religion and society supresses women. Law tries to give some rights to women protect them from harassment.But they are not accessible to every women or rather many don't open their mouths to courts and police and live as a chattel accepting the pain. Even today a man can marry second wife and continue the relationship if the first wife accepts and does not complain about it.

Women though they work they dont have economic freedom to handle their finance as per their wish. They cannot spend on their parents or siblings just as a man does.

Women are not just to beautify themselves, cook, raise kids, clean and wash. A woman must first understand that have a profession to contribute to the growth of the country. As revolutionist Periyar said, " if a woman could earn money then no man would dare to treat them as slaves"

With all these issues are women liberated from their chains? is a million dollar question.

Let us not celebrate women's day as another ritual . When a women is respected just as a man; when a women has all rights men have then that day can be "HAPPY WOMEN'S DAY"