Wednesday, May 7, 2008

கவி

எனை கவி பாட வைத்த என் கவியே
உனை வர்ணிக்கும் என் கவியை கேள் சகியே - என்
மனம் கவி போல் தாவுகின்றது - என்னவளே,
உனை கண்டதால் கவி பாடினேன்- எனை
நிராகரித்து காட்டில் அலையும் கவியாய் மாற்றிடாதே!!

கவி - என்றால் கவிதை என்றும்
பொருள் உண்டுகவி - என்றால் குரங்கு என்றும் பொருள் உண்டு
இரண்டையும் கொண்டு எழுதிய கவிதை!!

Tuesday, May 6, 2008

செல்வக் குழந்தாய

புன்னகை மாறா செல்வக் குழந்தாய்,
பூமிதனில் பூத்த வாடா மலரே!!

பொல்லா உலகிலே நியும் புழுதியாய் மாறாமல்
பொங்கிடும் அறிவால் - பகுத்தறிவால்(ள்) வென்றிடு!!

என்றும் அன்பினை அகத்தில் கொண்டு
ஏற்றமாய் அகிலத்தை அடக்கமாய் ஆண்டிடு

வாழ்க்கையில் துன்பம் துளை போடும் - நீ
விளக்காய் உனை கொண்டு துளையை தூளாக்கிடு

மனிதம் வளர்த்து மனுடத்தில் மெல்ல
மாற்றத்தை உன் கொள்கையால் கொணர்ந்திடு

புரட்சி தீயால் புரட்டு பேசி ஏய்த்திடும் ஏத்தர்களை
புரட்டி போடும் கோடாரியாய் இருந்திடு

மூடத்தனத்தில் மூழ்கிய சமூகத்தை சுயசிந்தனையால்
முன்னேற்றப் பாதையில் முனைப்போடு நகர்த்திடு

சில அரசியல் திமிங்கலங்களின் திமிரை
சீற்றம் கொண்டு சிலிர்தெழுந்து சிதைத்திடு

வன்முறையால் பாதை மாறிடும் பாதகர்களை உன்
விழி அம்(ன்)பால் வெட்கிட வைத்திடு

புன்னகை மாறா செல்வக் குழந்தாய்,
பூமிதனில் பூத்த வாடா மலரே!!

பொல்லா உலகிலே நியும் புழுதியாய் மாறாமல்
பொங்கிடும் அறிவால் - பகுத்தறிவால்(ள்) வென்றிடு!!

நதியின் கண்ணீர

வானத்தின் கண்ணீராம்
மழை நீர்
பூமிதனை நனைக்கையில்
நதிகள் உருவெடுக்கும்!!-அது
பாம்பினைப்போல் வளைந்து வளைந்து
ஊர்களிடையே ஓடும்போது
மக்கள் நதி நீர் சண்டையால்
பிளவுபட்டு நிற்கையிலே
நதி நீர் கண்ணீர் வடிக்கின்றது
அதனால் தான் கடல் நீர்
உப்பு கரிக்கின்றதோ??

Thursday, April 17, 2008

நினைத்தேன் உனை

நாடினேன் உன் அன்பை

நனைந்தேன் உன் நினைவுகளில் -அது

நனைத்ததே என் உயிரை

நிந்தித்திடாதே எனை

நீக்கிடாதே உன்னிலிருந்து

நியாயம்தான் என் காதல் என

நினைத்திடு ஒரு நிமிடம்

நிச்சயமாய் புரிந்திடும் உனக்கும்

நித்திரையிலும் உனை மறக்காத

நெய்தல் நிலம் போன்ற என்

பாசம் !!

Tuesday, April 15, 2008

எச்சரிக்கை !!எச்சரிக்கை !!

எல்லாம் வாருங்க
எல்லாம் கேளுங்க
தமிழனத்தின்
கதை இதுங்க!!
வீரத்தமிழனின்
கதை இதுங்க!!
நாடும் , வீடும்
துறந்து போனான்
கடலும் , மலையும்
கடந்து போனான்
காசும், பணமும்
சேரக்கண்டான்
புகழும், மாலையும்
சேரக்கண்டான்- ஆனா
மதிப்பு மட்டும்
வந்து சேரலங்க!!
மிதிப்பும் கொதிப்பும்
தான் மிச்சமுங்க!!
வாழ நாடு கேட்டா?
ஈழத்தில் படுகொலைங்க!!
மலேசியாவும் தமிழனைத்தான்
தீண்டுதுங்க!!
குடிக்க தண்ணீர் கேட்டா
ஆந்திரா ஆத்திரத்தில ஆடுதுங்க
கேரளம் அணையைத்தான் கட்டுதுங்க
கர்நாடகம் கருநாகமா கொத்துதுங்க!!
பயிர் வாட்டத்த
போக்கத்தான் தண்ணீர் வரலங்க
உயிர் வாட்டத்த போக்கவும்
தண்ணீர் வரலங்க
இளிச்ச வாய் இனம்
தமிழினம் என்பதா?
வந்தோரை வாழ வைத்து
வீழ்ந்த இனம் என்பதா?
ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயமுங்க
தமிழனின் வீரம் மட்டும் சாகலங்க
உணர்வும்தான் தீரலங்க
நீர்பூத்த நெருப்பா என்றுமே இருக்குமுங்க
ஒரு நாள் அதுவும் தான் வெடிக்குமுங்க
தீண்டியோரை தீக்கிரையாக்குமுங்க
புறநானூற்று வீரத்தமிழன்
புறமுதுகு காட்டி பகைவரைத்தான்
விரட்டும் வரை
பூமிதனில் தன் புகழை
நிலை நாட்டும் வரை
இல்லை எவர்க்கும் கண்ணுறக்கமுங்க
இது வாய் சவடால் இல்லங்க
எச்சரிக்கை !!எச்சரிக்கை !!

Thursday, March 20, 2008

எதனால்?

விதையின் விளைச்சல்
விளைந்திடும் நிலத்தால்
விண்மீனின் வெளிச்சம்
வானின் இருளால்
மலைகளின் கம்பீரம்
விண்னைத்தொடும் உயரத்தால்
மழையின் பொழிவு
துளிகளின் தொடர்ச்சியால்
அறிவின் தெளிவு
கற்றோரின் தொடர்பால்
உலகத்தின் துடிப்பு
உயிர்களின் தொடர்ச்சியால்
இரவும் பகலும்
பூமியின் சுழற்ச்சியால்
முகத்தின் அழகு
அகத்தின் எண்ணத்தால்
மனிதனின் வாழ்க்கை
தன்னம்பிகையின் சுவடால்
கவிஞனின் கவிதை
எண்ணங்களின் வெளிப்பாடால்
இல்லறத்தில் மகிழ்ச்சி
புரிதலின் வெற்றியால்
கனவின் மாயம்
தூக்கத்தின் தெளிவால்
வாழ்வின் வெற்றி
அன்பின் அரவணைப்பால்
காதலில் இன்பம்
காதலரின் இடைவெளியால்
மனிதனின் மகத்துவம்
மனிதத்தின் வெளிப்பாடால்!!

உனைநான்தான் பிரியேன்!!

என்னையும் விரும்பிட ஓர் உயிர்
என்னையும் நேசித்திட ஓர் உறவு
எனக்கெனவே வாழ்ந்திட ஓர் உருவம்
என்னை உலகமாய் ஏற்றிட ஓர் உலகம்
எத்துனை இன்பம், எத்துனை இன்பம்
என் தலைவனின் அன்பில்!!
எத்துனை இறுக்கம் ,எத்துனை இறுக்கம்
என்ஐ உன் அரவணைப்பில்!!
எத்துனை இனிப்பு ,எத்துனை இனிப்பு
என் மன்னவன் தரும் முத்தத்தில்
எத்துனை துன்பம், எத்துனை துன்பம்
ஏற்ற போதிலும் என் உரியவனே!!
எந்நாளும் உனைநான்தான் பிரியேன்!!