புன்னகை மாறா செல்வக் குழந்தாய்,
பூமிதனில் பூத்த வாடா மலரே!!
பொல்லா உலகிலே நியும் புழுதியாய் மாறாமல்
பொங்கிடும் அறிவால் - பகுத்தறிவால்(ள்) வென்றிடு!!
என்றும் அன்பினை அகத்தில் கொண்டு
ஏற்றமாய் அகிலத்தை அடக்கமாய் ஆண்டிடு
வாழ்க்கையில் துன்பம் துளை போடும் - நீ
விளக்காய் உனை கொண்டு துளையை தூளாக்கிடு
மனிதம் வளர்த்து மனுடத்தில் மெல்ல
மாற்றத்தை உன் கொள்கையால் கொணர்ந்திடு
புரட்சி தீயால் புரட்டு பேசி ஏய்த்திடும் ஏத்தர்களை
புரட்டி போடும் கோடாரியாய் இருந்திடு
மூடத்தனத்தில் மூழ்கிய சமூகத்தை சுயசிந்தனையால்
முன்னேற்றப் பாதையில் முனைப்போடு நகர்த்திடு
சில அரசியல் திமிங்கலங்களின் திமிரை
சீற்றம் கொண்டு சிலிர்தெழுந்து சிதைத்திடு
வன்முறையால் பாதை மாறிடும் பாதகர்களை உன்
விழி அம்(ன்)பால் வெட்கிட வைத்திடு
புன்னகை மாறா செல்வக் குழந்தாய்,
பூமிதனில் பூத்த வாடா மலரே!!
பொல்லா உலகிலே நியும் புழுதியாய் மாறாமல்
பொங்கிடும் அறிவால் - பகுத்தறிவால்(ள்) வென்றிடு!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment