Thursday, May 8, 2008

அன்னக்கிளியே!!

ஏன் இவ்வளவு ஓய்வில்லா உழைப்பு என்று ஆசை மனையாள் மன்னவனைக் கேட்க அவன் கூறும் பதில் கவிதையாய்...

அன்னம் கிடைக்கத்தான் திண்டாட்டம் அன்னக்கிளியே!!
திண்ணத்தோடு வாழ்க்கை போராட்டம் அன்னக்கிளியே!!

வண்ணமில்லா வாழ்வுதான் நம் வாழ்வு அன்னக்கிளியே!!
துன்பத்தோடு உழல்வதும் நிரந்தரமாச்சு அன்னக்கிளியே!!

பிணியும் பசியும் நமக்குமட்டுந்தான் அன்னக்கிளியே!!- பேச
துணிவும் இன்றி செக்கு மாடு போல் உழைக்கிறோம் அன்னக்கிளியே!!

கண்ணியத்தோடு வாழதான் அன்னக்கிளியே!!
காலந்தோறும் கண்ணீரில் மிதக்கனும் அன்னக்கிளியே!!

நாணிட வேண்டும் நாய் பொழப்பு நமதாச்சு அன்னக்கிளியே!!
நாயிலும் சாதி உண்டு இந்த நாட்டிலே அன்னக்கிளியே!!

பண்டாரங்களும் புண்ணியம் செய்தவை நம்நாட்டில் அன்னக்கிளியே!!
பாட்டாளி கூட்டம் கூனிப்போன சமூகம் அன்னக்கிளியே!!

பேசி பயனென்ன அன்னக்கிளியே!!
வாய் சொல்லில் வீரர் உண்டு நம்மில் அன்னக்கிளியே!!

களைப்பு போக தூங்கணும் அன்னக்கிளியே!!
காலை வேலை இருக்கு அன்னக்கிளியே!!

No comments: