Saturday, May 17, 2008

திருநங்கை

வசதியாய் பிறக்கின்றோம்
வறுமையில் வீழ்கின்றோம்
வேதனையில் உழல்கின்றோம்

மதிக்கவும் நாதியில்லை
மனிதர்களாய் வாழ்திடவுமில்லை
மிதித்தனர் எங்களை புழுவாய்

வெகுண்டு எழுந்தோம்- ஆனால்
புறக்கணிக்கப்பட்டோம் புண்படுத்தப்பட்டோம்
வலிகள் ரனங்களாயின!!

உண்ணும் உணவினை
இரந்து உண்டோம்!!
உடையால் நடையால் பரிகாசிக்கப்பட்டோம்

கேலிச் சித்திரங்களானோம்
கேலி பேசும் கயவர்களை
கிலியால் விரட்டினோம்!!

நாதியற்று நாய்போல்
நடோடியாய் வாழ்ந்திட்ட
நாங்களும் இனி
திருநங்கைகள் ஆனோம்!!

அண்மையில் தமிழக அரசு அரவாணிகளை திருநங்கைகள் என அறிவித்தை அந்த புரட்சி அறிவிப்பினை வரவேற்று கவிதை - திருநங்கை பாடுவது போல்!!

1 comment:

அகரம் அமுதா said...

அட! உங்களுக்கென் வாழ்த்துக்கள்-ங்க! கவிதையும் அருமை. அவர்களுக்காகப் பாடவேண்டும் என்ற உள்ளம் உங்கள் ஒருவருக்காவது வந்ததே! வாழ்த்துக்கள்.