வாழ்க்கையின் அடிநாதம்!
வீழ்ந்தபோதும் விண்னைத்தொட்டிடும்!
தடைகள் பல நேரினும்
தகர்த்தெரியும் மனத்திடம்!
கண்ணீர் கரைப்பினும்
கர்வத்தோடு கரைசேர்ந்திடும்!
உறவுகள் பிரிந்திடினும்
ஊன்றுகோலாய் இருந்திடும்!
மனம் சோர்வடைந்திடினும்
கனப்பொழுதில் மகிழ்ச்சி தந்திடும்!!
ஏமற்றம் காணினும்
ஏற்றம் தந்திடும்!
பங்கம் நேரினும்
பாங்காய் நேர் செய்திடும்!
சுனாமியாய் துன்பம் வரினும்
சூறாவளியாய் வெகுண்டு தகர்த்திடும்!
உறுப்பாய் கைகள் இருப்பினும்
உந்துதலாக விளங்கும் மூன்றாம் கை!
இன்பம் தந்திடும் கை!
கனவை நினைவாய்
நினைவாய் காவியமாய்
காவியத்தை வரலாறாய்
எழுதிடும் கை! - அது
நம்பிக்கை!!
தன்னம்பிக்கை!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment