Sunday, March 25, 2007

வரலாற்றுப்பிழை!!

எண்ணெய்க் காணா தலைமுடி!
ஒட்டியக் கன்னம்!!
சோறு காணா வயிறு!
ஏக்கம் வெளியிடும் கண்கள்!
சோகம் ததும்பும் மனது!
வெளிறிய முகம்-கையில் கோணிப்பை!
கிழிசலோடு காகிதம் பொறுக்கும் நேருவின் கனவு!
பெற்றோர் இரைப்பை நிரப்ப - கையேந்தும்
கருப்பை மொட்டுகள்!
கற்கும் வயதில் கல் சுமக்கும்
பாரதத்தின் கற்கண்டுகள்!
அழகு ஒவியங்கள்-உணவுவிடுதியின்
புகையினில் அழிந்தது!
வறுமையின் கோரத்தாண்டவம்!! -மலர்கள்
வளமை இழந்து ரோட்டோரங்களில்!!
அட!
யார் இவர்கள்?
இவர்கள் தான் இந்தியாவின்வருங்கால தூண்கள்!!
வலுவிழந்த தூண்கள்!!
புண்ணிய தேசத்தின் புதல்வர்கள்!
வருங்காலம் கூறும் சோதிடமண்ணில்தான்-இவர்கள்
எதிர்காலம் ??
கல்விக்கு கடவுள் வணங்கும் மண்ணில்தான்
படிப்பறிவில்லா மழலைச்செல்வங்கள்!
வரலாறு பொருக்கா வரலாற்றுப்பிழை!!

No comments: