Sunday, March 25, 2007

யாருக்காக இந்த கொண்டாட்டம்??

அய்யோ! அம்மா! என்ற அலறல்
குடிபோதையில் கணவன் அல்ல அல்ல கயவனிடம்
தினம்தோறும் அடியும்! உதையும்!

காலையில் அரைவயிற்றுக் கஞ்சியுடன்
தலையில் விறகு சுமந்து
தள்ளாடிய நடையும்! களைப்பேறிய முகமும்!

வீட்டின் வேலைகளை முடித்து
பேருந்தில் இடிபட்டுஅலுவலகத்தில்
கோர்ப்புகளோடும்!மேலதிகாரியின் கோபத்தோடும்!

மாலையிட்ட கண்ணாளன் மறைந்த சோகம்
மனதினில் தவழ!
கலங்கிய கண்களோடும்!குழம்பிய நெஞ்ச்த்தோடும்!
ஓநாய்களுக்கு மத்தியில் போராட்டம்!!

இன்று உலக மகளிர் தினம்
வாருங்கள் கொண்டாடுவோம்!! என்ற கூக்குரல்!
யாருக்காக இந்த கொண்டாட்டம்??

No comments: