பெண்ணை சீண்டுவது
குற்றம் என்றே பகன்றிடுவார்
கேலி பேசுவதும்
கைதனைப் பற்றி
இழுப்பதும் தவறு எனவே
குதித்திடுவார் - ஆனால்
கிருஷ்ண லீலைகள்
பற்றியே பாடி பாடி
ஆனந்தம் கொண்டிடும்
இவர் உள்ளம்!!பெண்ணை சீண்டுவது
குற்றம் என்றே பகன்றிடுவார்
கேலி பேசுவதும்
கைதனைப் பற்றி
இழுப்பதும் தவறு எனவே
குதித்திடுவார் - ஆனால்
கிருஷ்ண லீலைகள்
பற்றியே பாடி பாடி
ஆனந்தம் கொண்டிடும்
இவர் உள்ளம்!!மரணம் எப்பொழுது வேண்டுமானாலும் மனிதனுக்கு ஏற்படும். ஏற்படுகின்ற சமயம் சில நேரங்களில் ஒரு மனிதன் வாழும் காலங்களில் வாழ்ந்த வாழ்க்கைக்குப் புரம்பாக அவன் மரண நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனை தவிர்த்திட இது போன்ற மரண சாசனம் பயன்படும் என்ற காரணம் கருதி இத்தகு சாசனம் எழுதுகின்றேன்!!
என் மரணத்திற்குப் பின் ...
1) எந்த சடங்கும் நடைபெறக்கூடாது
2) நெற்றியில் பட்டையோ அல்லது வேறு மதக்குறியிடுகள் இடுதல் கூடாது
3) குளிப்பாட்டுதல், புது துணி அணிவித்தல் , தேவாரப் பாடல்கள் பாடுவது கூடாது
4) கண்களை நான் இறந்த 6 மணி நேரத்திற்குள்ளாக தானம் செய்ய வேண்டும்
5) என் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தருதல் வேண்டும்
6) 16 - ஆம் நாள் சடங்கு என்று எதுவும் கூடாது
7) இறப்பிற்குப் பின் தேவசம் கூடாது. என் நினைவு நாள்தனில் ஏதாவது செய்ய விரும்பினால் பகுத்தறிவு பிரச்சாரமாக இருக்கட்டும்!!
இதுவே எனது மரண அவா!!
வசதியாய் பிறக்கின்றோம்
வறுமையில் வீழ்கின்றோம்
வேதனையில் உழல்கின்றோம்
மதிக்கவும் நாதியில்லை
மனிதர்களாய் வாழ்திடவுமில்லை
மிதித்தனர் எங்களை புழுவாய்
வெகுண்டு எழுந்தோம்- ஆனால்
புறக்கணிக்கப்பட்டோம் புண்படுத்தப்பட்டோம்
வலிகள் ரனங்களாயின!!
உண்ணும் உணவினை
இரந்து உண்டோம்!!
உடையால் நடையால் பரிகாசிக்கப்பட்டோம்
கேலிச் சித்திரங்களானோம்
கேலி பேசும் கயவர்களை
கிலியால் விரட்டினோம்!!
நாதியற்று நாய்போல்
நடோடியாய் வாழ்ந்திட்ட
நாங்களும் இனி
திருநங்கைகள் ஆனோம்!!
அண்மையில் தமிழக அரசு அரவாணிகளை திருநங்கைகள் என அறிவித்தை அந்த புரட்சி அறிவிப்பினை வரவேற்று கவிதை - திருநங்கை பாடுவது போல்!!
ஏன் இவ்வளவு ஓய்வில்லா உழைப்பு என்று ஆசை மனையாள் மன்னவனைக் கேட்க அவன் கூறும் பதில் கவிதையாய்...
அன்னம் கிடைக்கத்தான் திண்டாட்டம் அன்னக்கிளியே!!
திண்ணத்தோடு வாழ்க்கை போராட்டம் அன்னக்கிளியே!!
வண்ணமில்லா வாழ்வுதான் நம் வாழ்வு அன்னக்கிளியே!!
துன்பத்தோடு உழல்வதும் நிரந்தரமாச்சு அன்னக்கிளியே!!
பிணியும் பசியும் நமக்குமட்டுந்தான் அன்னக்கிளியே!!- பேச
துணிவும் இன்றி செக்கு மாடு போல் உழைக்கிறோம் அன்னக்கிளியே!!
கண்ணியத்தோடு வாழதான் அன்னக்கிளியே!!
காலந்தோறும் கண்ணீரில் மிதக்கனும் அன்னக்கிளியே!!
நாணிட வேண்டும் நாய் பொழப்பு நமதாச்சு அன்னக்கிளியே!!
நாயிலும் சாதி உண்டு இந்த நாட்டிலே அன்னக்கிளியே!!
பண்டாரங்களும் புண்ணியம் செய்தவை நம்நாட்டில் அன்னக்கிளியே!!
பாட்டாளி கூட்டம் கூனிப்போன சமூகம் அன்னக்கிளியே!!
பேசி பயனென்ன அன்னக்கிளியே!!
வாய் சொல்லில் வீரர் உண்டு நம்மில் அன்னக்கிளியே!!
களைப்பு போக தூங்கணும் அன்னக்கிளியே!!
காலை வேலை இருக்கு அன்னக்கிளியே!!