மரணம் எப்பொழுது வேண்டுமானாலும் மனிதனுக்கு ஏற்படும். ஏற்படுகின்ற சமயம் சில நேரங்களில் ஒரு மனிதன் வாழும் காலங்களில் வாழ்ந்த வாழ்க்கைக்குப் புரம்பாக அவன் மரண நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனை தவிர்த்திட இது போன்ற மரண சாசனம் பயன்படும் என்ற காரணம் கருதி இத்தகு சாசனம் எழுதுகின்றேன்!!
என் மரணத்திற்குப் பின் ...
1) எந்த சடங்கும் நடைபெறக்கூடாது
2) நெற்றியில் பட்டையோ அல்லது வேறு மதக்குறியிடுகள் இடுதல் கூடாது
3) குளிப்பாட்டுதல், புது துணி அணிவித்தல் , தேவாரப் பாடல்கள் பாடுவது கூடாது
4) கண்களை நான் இறந்த 6 மணி நேரத்திற்குள்ளாக தானம் செய்ய வேண்டும்
5) என் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தருதல் வேண்டும்
6) 16 - ஆம் நாள் சடங்கு என்று எதுவும் கூடாது
7) இறப்பிற்குப் பின் தேவசம் கூடாது. என் நினைவு நாள்தனில் ஏதாவது செய்ய விரும்பினால் பகுத்தறிவு பிரச்சாரமாக இருக்கட்டும்!!
இதுவே எனது மரண அவா!!
Saturday, May 24, 2008
மரண சாசனம
Wednesday, May 21, 2008
எதைப்பற்றி எழுத?
எழுதுகோலால் எதைப்பற்றி எழுத?
இடைவிடா சிந்தனை செய்தும்
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெரியவில்லை!!
காலந்தோறும் கணினி முன்
களைப்பாய் பணியாற்றுவதை எழுதவா?
கழுத்து வலிக்க பணிசெய்தும்
காசு பற்றாக்குறையை எழுதவா?
அயல் நாட்டிற்கு நம் அறிவை
அடகு வைக்கும் அவலத்தை எழுதவா?
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெளிவில்லை!!
அகதிகளாய் எம் மக்கள்
ஆதரவு இன்றி அல்லல் படுவதை எழுதவா?
அனுப்பொழுதும் இனப்படுகொலைக்கு
பலியாவதை எழுதவா?
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெளிவில்லை!!
எம் நாட்டின் பொருளாதார தரத்தை எழுதவா?
பொருள் ஒரு சிலரிடம் குவிந்து குத்தாட்டம்
போடும் குறைதனை எழுதவா?
பிடி சோறும் இன்றி தவிக்கும் எம் நாட்டின்
மறுபக்க வறுமையின்
கொடுமையை பகர்ந்திடவா?
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெளிவில்லை!!
இளைய சமூகம் சினிமா மோகம்
கொண்டு சீரழியும் சீர்கேட்டை எழுதவா?
நாகரிக நடையில் தன்மானம்
நலிவடைவதை எழுதவா?
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெளிவில்லை!!
மதத்தால் மதியிழக்கும்
மூடரைப்பற்றி எழுதவா?
மதவெறியால் மாண்ட
மக்களைப்பற்றி எழுதவா?
சாதியால் எம் மக்கள்
சிதையும் கதை எழுதவா?
சாதிகொண்டு அரசியல் நடத்தும்
ஈனப்பிழைப்பு அரசியல்
முதலைகள் பற்றி எழுதவா?
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெளிவில்லை!!
எம் நாட்டின் தண்ணீர்
பிரச்சனை எழுதவா?
எம் நாட்டின் எல்லை
பிரச்சனை எழுதவா?
எம் நாட்டை தகர்க்க
துடிக்கும் அண்டை
நாடுகளின் திட்டம் எழுதவா?
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெளிவில்லை!!
பெண்களின் நிலை பற்றி எழுதவா?
தீயில் கருகும் மலர்கள் பற்றி எழுதவா?
கருவில் கரையும் மொட்டுகள் பற்றி எழுதவா?
சமூகச் சிந்தனையின்றி அழகில் - செல்வத்தில்
நாட்டம் கொண்டு தன் நிலை அறியா
பேதைகள்பற்றி எழுதவா?
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெளிவில்லை!!
எதைப்பற்றி எழுத - என்
எழுதுகோலால் எதைப்பற்றி எழுத?
இடைவிடா சிந்தனை செய்தும்
எதைப்பற்றி எழுத என
எள்ளவும் தெரியவில்லை!!
Saturday, May 17, 2008
திருநங்கை
வசதியாய் பிறக்கின்றோம்
வறுமையில் வீழ்கின்றோம்
வேதனையில் உழல்கின்றோம்
மதிக்கவும் நாதியில்லை
மனிதர்களாய் வாழ்திடவுமில்லை
மிதித்தனர் எங்களை புழுவாய்
வெகுண்டு எழுந்தோம்- ஆனால்
புறக்கணிக்கப்பட்டோம் புண்படுத்தப்பட்டோம்
வலிகள் ரனங்களாயின!!
உண்ணும் உணவினை
இரந்து உண்டோம்!!
உடையால் நடையால் பரிகாசிக்கப்பட்டோம்
கேலிச் சித்திரங்களானோம்
கேலி பேசும் கயவர்களை
கிலியால் விரட்டினோம்!!
நாதியற்று நாய்போல்
நடோடியாய் வாழ்ந்திட்ட
நாங்களும் இனி
திருநங்கைகள் ஆனோம்!!
அண்மையில் தமிழக அரசு அரவாணிகளை திருநங்கைகள் என அறிவித்தை அந்த புரட்சி அறிவிப்பினை வரவேற்று கவிதை - திருநங்கை பாடுவது போல்!!
Thursday, May 8, 2008
அன்னக்கிளியே!!
ஏன் இவ்வளவு ஓய்வில்லா உழைப்பு என்று ஆசை மனையாள் மன்னவனைக் கேட்க அவன் கூறும் பதில் கவிதையாய்...
அன்னம் கிடைக்கத்தான் திண்டாட்டம் அன்னக்கிளியே!!
திண்ணத்தோடு வாழ்க்கை போராட்டம் அன்னக்கிளியே!!
வண்ணமில்லா வாழ்வுதான் நம் வாழ்வு அன்னக்கிளியே!!
துன்பத்தோடு உழல்வதும் நிரந்தரமாச்சு அன்னக்கிளியே!!
பிணியும் பசியும் நமக்குமட்டுந்தான் அன்னக்கிளியே!!- பேச
துணிவும் இன்றி செக்கு மாடு போல் உழைக்கிறோம் அன்னக்கிளியே!!
கண்ணியத்தோடு வாழதான் அன்னக்கிளியே!!
காலந்தோறும் கண்ணீரில் மிதக்கனும் அன்னக்கிளியே!!
நாணிட வேண்டும் நாய் பொழப்பு நமதாச்சு அன்னக்கிளியே!!
நாயிலும் சாதி உண்டு இந்த நாட்டிலே அன்னக்கிளியே!!
பண்டாரங்களும் புண்ணியம் செய்தவை நம்நாட்டில் அன்னக்கிளியே!!
பாட்டாளி கூட்டம் கூனிப்போன சமூகம் அன்னக்கிளியே!!
பேசி பயனென்ன அன்னக்கிளியே!!
வாய் சொல்லில் வீரர் உண்டு நம்மில் அன்னக்கிளியே!!
களைப்பு போக தூங்கணும் அன்னக்கிளியே!!
காலை வேலை இருக்கு அன்னக்கிளியே!!
Wednesday, May 7, 2008
கவி
உனை வர்ணிக்கும் என் கவியை கேள் சகியே - என்
மனம் கவி போல் தாவுகின்றது - என்னவளே,
உனை கண்டதால் கவி பாடினேன்- எனை
நிராகரித்து காட்டில் அலையும் கவியாய் மாற்றிடாதே!!
கவி - என்றால் கவிதை என்றும்
பொருள் உண்டுகவி - என்றால் குரங்கு என்றும் பொருள் உண்டு
இரண்டையும் கொண்டு எழுதிய கவிதை!!
Tuesday, May 6, 2008
செல்வக் குழந்தாய
பூமிதனில் பூத்த வாடா மலரே!!
பொல்லா உலகிலே நியும் புழுதியாய் மாறாமல்
பொங்கிடும் அறிவால் - பகுத்தறிவால்(ள்) வென்றிடு!!
என்றும் அன்பினை அகத்தில் கொண்டு
ஏற்றமாய் அகிலத்தை அடக்கமாய் ஆண்டிடு
வாழ்க்கையில் துன்பம் துளை போடும் - நீ
விளக்காய் உனை கொண்டு துளையை தூளாக்கிடு
மனிதம் வளர்த்து மனுடத்தில் மெல்ல
மாற்றத்தை உன் கொள்கையால் கொணர்ந்திடு
புரட்சி தீயால் புரட்டு பேசி ஏய்த்திடும் ஏத்தர்களை
புரட்டி போடும் கோடாரியாய் இருந்திடு
மூடத்தனத்தில் மூழ்கிய சமூகத்தை சுயசிந்தனையால்
முன்னேற்றப் பாதையில் முனைப்போடு நகர்த்திடு
சில அரசியல் திமிங்கலங்களின் திமிரை
சீற்றம் கொண்டு சிலிர்தெழுந்து சிதைத்திடு
வன்முறையால் பாதை மாறிடும் பாதகர்களை உன்
விழி அம்(ன்)பால் வெட்கிட வைத்திடு
புன்னகை மாறா செல்வக் குழந்தாய்,
பூமிதனில் பூத்த வாடா மலரே!!
பொல்லா உலகிலே நியும் புழுதியாய் மாறாமல்
பொங்கிடும் அறிவால் - பகுத்தறிவால்(ள்) வென்றிடு!!
நதியின் கண்ணீர
மழை நீர்
பூமிதனை நனைக்கையில்
நதிகள் உருவெடுக்கும்!!-அது
பாம்பினைப்போல் வளைந்து வளைந்து
ஊர்களிடையே ஓடும்போது
மக்கள் நதி நீர் சண்டையால்
பிளவுபட்டு நிற்கையிலே
நதி நீர் கண்ணீர் வடிக்கின்றது
அதனால் தான் கடல் நீர்
உப்பு கரிக்கின்றதோ??