Tuesday, February 26, 2008

என் ஆசை மச்சானே!!

கணினியை காலமும் பார்த்திருக்கும்
என் ஆசை மச்சானே
கொஞ்சம் கண்களை தான் சிமிட்டிடுங்க
கொஞ்சம் என்னையும் தான் பார்த்திடுங்க

மாலை சூரியன் போனதும் அறியாம
கடுமையாதான் உழைச்சிடும் என் மச்சானே
காசும் பணமும் பெரிசு இல்ல ராசாவே!
பாசமும் நேசமும் தான் பெரிசுன்னு புரிஞ்சிடுங்க!!

அவியலும் பொரியலும் கைசுட்டு கால்சுட்டு
நானும்தான் ஆக்கி வைக்க
அதை பக்குவமா பரிமாற கனவுதான் நானும் வச்சேன்
கனவாதான் போச்சுதுங்க
சோறும் கறியும் ஆறித்தான் போனதுங்க!!

முத்தம் நூறு கொடுக்க
அப்பா எங்கனு கேட்டு கேட்டு
முத்தான நம்ம புள்ளதான்
ஏக்கத்துல தூங்குதுங்க!!

சனியும் ஞாயிறும்
சட்டுனு போகுது
சாவகாசமா பேசிட
அவகாசமும் இல்லங்க!!

சிரிச்சு பேசவும்
தோள்ல சாஞ்சிடவும்
காதுல கதைக்கவும்
நேரம் தான் இல்லங்க!!

கணினியை காலமும் பார்த்திருக்கும்
என் ஆசை மச்சானே
கொஞ்சம் கண்களை தான் சிமிட்டிடுங்க
கொஞ்சம் என்னையும் தான் பார்த்திடுங்க
என் ஏக்கத்தையும் புரிஞ்சிடுங்க!!

No comments: