
வேலை நிமித்தம் வெளியூர்
செல்வதாய் நீ சொல்லும்போதெல்லாம்
கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தாலும்
உனக்காக,
மகிழ்ச்சியாய் இருப்பது போல் நடிப்பேன்!!
நீ என் கை பிடித்து
உனக்கு இருக்கும் அதே கடினம் என்னுள்ளும்,
என்று சொல்லும்போது
கட்டிப்போட்ட கண்ணீர்த்துளிகள் மீண்டும்
எட்டிப்பார்க்கின்றன!!
No comments:
Post a Comment