This poem was written based on the Suicide act of Revathi( software engineer) at hydrebad...
வாழ்க்கை வாழ்வதற்கே
வறுமை வரினும்
வளமை குன்றினும்
வாழ்வு நொடிந்திடினும்
வாழ்க்கை வாழ்வதற்கே!!
வாழ்க்கை என்ன காகிதமா
கசக்கி எறிய?
வாழ்க்கை என்பது வரம் அல்ல
தவம்!
சிற்பியின் உளியில் செதுக்கிடப்படும்
கல் சிற்பம் ஆவது போல !!
துன்பங்கள் தான் மானிட
வாழ்வின் சிறப்பிற்க்கு
வழித்துணை!!
காதல் தோல்வி
வாழ்க்கையின் அனுபவம்!!
அனுபவத்தை பயின்று
வாழ்வில் இலக்கை
அடைந்திட வெற்றி நடை
போடு!!
வாழ்க்கை வாழ்வதற்கே
வறுமை வரினும்
வளமை குன்றினும்
வாழ்வு நொடிந்திடினும்
வாழ்க்கை வாழ்வதற்கே!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment