அன்பே!!
நேற்று வரை நான் வார்த்தையாய்
இன்று முதல் வாக்கியமாய்
நேற்று வரை நிலவாய்
இன்று முதல் சூரியனாய்
நேற்று வரை துளியாய்
இன்று முதல் அருவியாய்
நேற்று முதல் புயலாய்
இன்று முதல் தென்றலாய்
நேற்று வரை தோழியாய்
இன்று முதல் உயிர்மூச்சாய்
நேற்று வரை கனவாய்
இன்று முதல் நினைவாய்
நேற்று வரை நிழலாய்
இன்று முதல் நிரலாய்
நேற்று வரை நீயும் நானும் தனியாய்
இன்று முதல் நாம் ஒன்றாய்
நேற்று வரை விரிந்த இதழ்களாய்
இன்று முதல் முத்தஇதழ்களாய்
நேற்று வரை வெறும் மேகங்களாய்
இன்று முதல் மழை மேகங்களாய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment