Saturday, December 1, 2007

தமிழர் தலைவர் - வீரமணி !!

தமிழர் தலைவர்- வீரமணி !! ( 75 வது பிறந்த நாளை முன்னிட்டு எழுதியது )

பெரியாரின் கொள்கைச்
சொத்து !
திராவிடத் தந்தையின்
தளபதி!
இனஎதிரிகளை ஈட்டியாய்
பாய்ந்து அழித்திடும்
அடலேறு!!
சமுகநீதியின் வெற்றிக்கு
வித்திட்ட வீரத்தின்
வார்ப்பு!!
இடியாய் கொள்கையினை
முழங்கிடும் ஈரோட்டுச் சிங்கத்தின்
கொடை!
ஓய்வறியா ஓடி
உழைத்திடும் நடமாடும்
பல்கலைக்கழகம் !!
பெரியார் பெருமை கூறா
நாளெல்லாம் பிறவா நாளே !- என
நாளும் நினைத்திடும்
கருஞ்சிறுத்தை!!
நொடிப்பொழுதும் கண்யராது
இனமானம் காத்திட என்றும்
கரம்நீட்டும் தமிழரின்
உடை!!
கருப்பு மெழுகுவர்த்திகளின்
இணையற்ற கருப்பு
வைரம்!!
பெரியாருக்குப்பின் இயக்கம்
இயங்குமா?
என்ற வினாக்குறியை
ஆச்சரியக் குறியாக்கிய
குணக்குன்று!!
அன்று!!
பிளாட்டோக்கு ஒரு அரிஸ்டாடல்!!
இன்று!!
பெரியாருக்கு ஒரு வீரமணி!!
ஆம்!!
வீரமணி எதிரிகளின்
சாவுமணி!!
வீரமணி இனத்துரோகிகளின்
எட்டாக்கனி!!
வீரமணி எதிரிகளின்
சிம்மசொப்பனம்!!
வீரமணி கொள்கையில்
நெருப்புமணி!
வீரமணி பெரியார்தந்த
தங்கமணி!!
வீரமணி சுயநலம் மறந்த
பொதுநலத்தின் முத்துமணி!!
வாழ்க தமிழர் தலைவர்!!

1 comment:

kannanisgood said...

Mam,
I read few of your posts in your blog. It makes a very interesting read. Thanks for posting.
One post which disrupted me was the one abt Veeramani. As few of my close relatives are in DK(I am not...though I am an atheist), I got a chance to know about him better. Though I got nothing against him, I think the Periyar thoughts should have reached greater heights with a better leader.
Sorry had I hurt ur feelings. also sorry for the spelling mistakes if there's any :)

and again thanks for the wonderful posts.