உன் அன்பில் கரைகிறேன்
உன் அரவணைப்பில் மகிழ்கிறேன்
உன் சிரிப்பில் சிதைகிறேன்
உன் கண்களில் பதிகிறேன்
உன் மனதினில் உதிக்கிறேன்
உன் உயிராய் மாறினேன்
உன் உளமாய் உருமாறினேன்
உன் சுவாசமாய் சுகிக்கிறேன்
உன் வாழ்வாய் வாழ்கிறேன்
உன் நினைவில் நெகிழ்கி்றேன்
உன் நேசத்தில் பயணிக்கிறேன்
உன் வாசத்தில் மணக்கிறேன்
உன் வசத்தில் எனை இழக்கிறேன்
என் உயிரை பிரிவு துயரிலிருந்து
உன்னுடன் மீட்டுச்செல்ல தாமதியாமல்
உடனே வா என் தலைவா!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment