Tuesday, December 11, 2007

சிறு சிறு துளியாய் என் மனதில் நீ........

Hi the below Poem was written by my friend....
Please send in your comments to
subchandran@gmail.com



உன்னிடமே நான்
தொலைந்து போகிறேன்
உன்னிடமே எனை
தேடியும் கிடைக்கிறேன்
ஆனால் உன்னுள்
தொலையவே உயிர் துடிக்கிறேன் !!
உன் விழிஅம்பில் (அன்பில்)
விழுந்து விட்டேன்
விழிக்க மட்டும் மனம் இல்லை
உன் குரலுக்காக காத்திருந்தேன்
அதனையே எதிர் பார்த்திருந்தேன்
புரண்டு படுத்தாலும் தூக்கம் இல்லை
கண்களிலே புரட்டி போடுகிறாய்!
புன் சிரிப்பின் அன்பினிலே!!
உன்னை பார்ப்பது
சிறிது நேரம் ஆகினும்
அந்நேரம் சிறகை விரித்துப்பார்க்கிறேன் !
சிறு சிறு துளியாய் என் மனதில் நீ!!
விழித்து பார்ப்பதர்க்குள் முழுதாய் நீ!!
வேடிக்கையாய் ஆரம்பித்தது - பின்
வாழ்வே உனக்கென மனம் மாற்றியது
உன் அன்பு எனை
உயரத்தில் நிறுத்தியது -
அதுவே என்
ஆணவங்களையும் நொறுக்கியது
என்னுள் பல மாற்றம்
வேண்டாம் என்று இருந்தேன் ..
பேச வைத்தாய் - பின்
இதனையே எனக்கு
வேலையாய் மாற்றினாய்
கண்ணிலே கனவுகள்...
உன்னோடு மட்டுமே
என் நினைவுகள்
புலம்ப ஆசையாக இருந்தாலும்
போதும் என நிறுத்திக்கொண்டேன்
சிறு சிறு துளியாய் என் மனதில் நீ........
விழித்து பார்ப்பதர்க்குள் முழுதாய் நீ...........

No comments: