கண்களால் எனை ஈர்க்கும் -என்
கனவுகளின் தலைவனே
பாசத்தால் எனை பின்னியே
என் மனதை வசப்படுத்தியவனே
என்னுள்ளே நீ நுழைந்த
காரணங்கள் தெரியவில்லை!- அதை
அறிவதற்க்கு முன்னரே நேசத்தால்
என் மனதை வசப்படுத்தியவனே
உனை பார்க்காமலே உன்
நிழலையும் நேசிக்கின்றேன் !
உன் அன்பால் உயிரை துளைத்து
என் மனதை வசப்படுத்தியவனே
தூக்கத்திலும் என் நினைவுகளில்
சுழன்று என் சுவாசத்தில்
முழுதாய் கலந்து
என் மனதை வசப்படுத்தியவனே
உன் வாசம் என் உயிரோடு
கலக்க அது எனை மயக்க
என்றுமே உன் வசத்தில்
எனை தொலைக்க
என் மனதை வசப்படுத்தியவனே !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment