Friday, December 14, 2007

உன வழியில் வாராதிருந்தால் ...

உன் வழியில் வாராதிருந்தால்
இன்றும் அடிமையாய்
விலங்கையும் விட
கீழ்த்தரமாய் வாழ்ந்திருப்போம்
மூடத்தனத்தின் சின்னமாய்
கல்வியில்லா பேதையாய்
கடவுள்களை நம்பும்
காட்டுமிராண்டியாய்
கணவனை வணங்கும்
கல்லாய் வாழ்ந்திருப்போம்
குழந்தைகள் பல பெற்று
குன்றி போயிருப்போம்
நகையும் அலங்காரமும்
நாணமும் அச்சமும்
கொண்டு ஞமலிபோல்
வாழ்ந்திருப்போம்
ஆனால்,
அய்யா உன் வழியில்
வந்ததனால்
அடிமை விலங்கை
ஒடித்து எறிந்தோம்
மூடத்தனத்தை முறியடித்து
கல்வியால் முன்னேறினோம்
உன் பகுத்தறிவுச்சுடர்
பட்டதால்
அறியாமை பஞ்சு
பற்றிஎரிந்தது
உன் தடி பிடித்து
ஈரோட்டுப்பாதை
நடந்ததால் அறிவு
பலம் ஏற்பட்டது !!
உன் கொள்கை
விதைத்த மனதில்
தன்னம்பிக்கை ஆலமரமாய்
ஓங்கி வளர்ந்தது !!
உன் வழி ஏற்றதால்
இளமை வளமை
என்று எண்ணாமல்
சமுதாய தொண்டிற்கு
என தெளிவுற்றோம்
எம் தந்தை பெரியாரே
எம்மை சிந்திக்கவைத்தாய்!
சிந்திப்பில் உணர்வுபெற்றோம்
இருள் நீங்கி வெளிச்சம்பெற்றோம்
ஆகையால் அய்யாவே!!
உம்மை வாசிக்கவில்லை
சுவாசிக்கின்றோம்!!

2 comments:

An Atheist said...

Arumai kani mozhi, ungal kavi panni thoodara en manamarnda vazhthukal............

KaniBlog said...

haha.. nanri thozharae :-)