Wednesday, November 7, 2007

கவிதை துளிகள்!!

நினைவுகள்!!

மனிதனின்
ஆழ் மனதை
தாலாட்டும் தொட்டில்!

மனிதம்

மனிதனிடம்
மாண்டு போன
உணர்ச்சி!!

தூக்கம்!!

மனித நம்பிக்கையின்
முதற் படி!!

Tuesday, November 6, 2007

அன்பென்னும் இசை!

மனதினில் இருக்கும் சோகங்களின் வடிகால்
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தாலும்
இரு மனங்களை ஒன்றாக்கும் அற்புத வரம்!!
காயங்கள் ரனமாகிப்போனால்-சில்லிடும்
காற்றேன மனதினை குளிரவைக்கும் மருந்து-இது
மனங்களை மட்டும் அல்ல மதங்களையும் ஒன்றாக்கும்!!
மக்களை மனித மாண்போடு நினைக்கும் குணம்!!
அழிவினை ஆக்கமாக்கும் ஆற்றால் மிக்கது
கண்ணீரால் கரையும் கண்களை புன்னகை பூக்கச்செய்யும் புல்லாங்குழல்!!
இந்த புல்லாங்குழலின் இசை அறிந்தவர் மட்டுமே வாசிக்க வேண்டும் என்றல்ல!!
எவர் வேண்டுமானாலும் வாசிக்கலாம்-நேசத்தோடு வாசிக்கலாம்!
அந்த நேசத்தில் மலரும் அன்பென்னும் இசை!
மௌனத்தின் , கண்களின் மொழி- அன்பென்னும் இசை!

எதிர்பார்ப்பு!!

மின்னலைப் போன்ற சிரிப்பு!
கொடியைப் போன்ற இடை!
முத்துப் போன்ற பற்கள்!
மீன் போன்ற விழி!
மான் போன்ற துள்ளல்!
பளிங்கு போன்ற கன்னங்கள்!
குயில் போன்ற குரல்!
இறகு போன்ற மென்மை!-அட
எத்துனை வர்ணிப்புகள் பெண்னைப் பற்றி
அழகு பதுமையாய் பெண்னை பார்ப்பதை விடுத்து
உணர்வுள்ள சக மனுஷியாய் , தோழியாய் பார்க்கட்டும் இந்த சமுகம்
நிறைவேறுமா இந்த எதிர்பார்ப்பு!!

யாருக்காக இந்த கொண்டாட்டம்??

அய்யோ! அம்மா! என்ற அலறல்
குடிபோதையில் கணவன் அல்ல அல்ல கயவனிடம்
தினம்தோறும் அடியும்! உதையும்!

காலையில் அரைவயிற்றுக் கஞ்சியுடன்
தலையில் விறகு சுமந்து
தள்ளாடிய நடையும்! களைப்பேறிய முகமும்!

வீட்டின் வேலைகளை முடித்து
பேருந்தில் இடிபட்டு
அலுவலகத்தில் கோர்ப்புகளோடும்!மேலதிகாரியின் கோபத்தோடும்!

மாலையிட்ட கண்ணாளன் மறைந்த
சோகம் மனதினில் தவழ!
கலங்கிய கண்களோடும்!குழம்பிய நெஞ்ச்த்தோடும்!
ஓநாய்களுக்கு மத்தியில் போராட்டம்!!

இன்று உலக மகளிர் தினம்
வாருங்கள் கொண்டாடுவோம்!! என்ற கூக்குரல்!
யாருக்காக இந்த கொண்டாட்டம்??

ஆட்டுக்குட்டி

சூரியன் உதிக்கையில
பொழுது விடியையல
கண்விழிச்சு எழுந்து வாசலகூட்டிப்பெருக்கி
அரிசியில கோலமிட்டு
கோயிலுக்கு வேண்டிய சமானை எடுத்துவச்சி
குளியல் முடிச்சி நெத்தி மத்தியல பொட்டு வச்சி
கயித்துக் கட்டிலில் ஒறங்கும் மச்சான
எழுப்பி குளிக்கச் சொல்லி
பொங்க வைக்க தேவையான சாமானை
அடுக்கி வைக்க - ஏ புள்ள!
அப்படின்னு பின்வாசல் நின்னு மச்சான் கூப்பாடு போட
மான் குட்டியின் துள்ளல்லோடு என்ன மச்சான் என
மூச்சு வங்கி நின்றாள் வள்ளி!!

அங்கு மே! மே! என கத்திக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் பார்த்து
ஏது இந்த ஆட்டுக்குட்டி? என்று கருப்பன் கேட்க
பெருமூச்சு வாங்கியே வள்ளி சொன்னாள்
போனவாரம் நீ சுரம் வந்து
படுக்கையில விழ - நம்ம ஊர் வைத்தியரும்
டவுன் ஆஸ்பத்திரிலதான் ஒன்ன காட்டணும்னு கைய விரிக்க

சோறு போட்ட மாட்டையும்
என் தாய் வீட்டு சீதனமா வந்த பித்தளை ஆண்டாவையும்
வித்துப்போட்டு வைத்தியம் பார்த்ததால
என் ராசா இப்போ எழுந்து நடமாட என் உள்ளம் துள்ளுது!

ஆனாலும் மறுபடியும் ஒனக்கு ஒடம்புக்கு எதுவும் வாராம இருக்க
என் மவராசா நோய் நொடி இல்லாம வாழ
காத்து கருப்பு அண்டாம இருக்க
அம்மனுக்கு பொங்க வச்சு கெடா வெட்டினா
ஒடம்புக்கு வாராம நூறு வருசம் நீ இருப்பனு
பூசாரி சொன்னதால நம்ம ஊரு சந்தையில
இந்த ஆட்டுக்குட்டிய வாங்கியாந்தேன்!

அட பைத்தியமே! என்ற கருப்பன்

காத்தும் இல்ல கருப்பும் இல்ல
எல்லாம் வெறும் பித்தலாட்டம்
சுரம் வர காரணம் சுத்தமான தண்ணி குடிக்காததால
டாக்டரு பாக்கலைனா எப்பவோ போயிருப்பேன்!!

ஒரு உசிர் பொழச்சதுக்கு
எந்த சாமி புள்ள
இன்னொரு உசிர் கேட்குது?
அப்படி கேட்டாதான் அது
சாமி ஆகுமா? என்று கருப்பன் கேட்க

மன்னிச்சிரு மச்சான்
மரமண்டையில ஒரச்சுது -என்ற வள்ளி
மே! என்று கத்திய ஆட்டுக்குட்டியை
பாசத்தோடு வருடினாள்!!

இயற்கையின் எச்சரிக்கை!

மழையாய்,
மரமாய்,
பூவாய்,
காயாய்,
கனியாய்,
விலங்காய்- என்றும் இயற்கை மனிதர் நலம் நாடும்!

ஆனால், மனித இனமே!
மழை தரும் மரங்களை வெட்டினாய்!- தண்ணீர்ப்
பஞ்சம் தலைவிரித்தாடியது!


உன் இருப்பிடம் அமைக்க
என் காடுகள் அழித்தாய்!

உன் தலைமுறை செழிக்க
என் தலைமுறையை அழிக்கின்றாய்!

செயற்கை வாழ்வு வாழ்கிறாய்
இயற்கையை அழித்து!

யானையும் புலியும் உலவிடும்
கானகத்தில் கட்டிடம் கட்டினாய்!- பின்

யானையால் தொல்லை!
புலியால் பயம் !
மக்கள் பீதி என்கிறாய்!

இயற்கையின் உரைவிடம் அழித்து
இன்பம் தேடும் மனிதனே!

நீ செய்த தவற்றால்!

வெப்பத்தால் கடல் நீர் உயர்வு!
கடல் கண்ட சோழபுரம் போல்!
கடல் கொண்டு செல்லும் பல ஊர்களை!

உன் சமுதாய முன்னேற்றத்திற்கு நாங்கள் தடையில்லை!
ஆனால் இயற்கையை அழித்து அழிவை தேடாதே!

உன் அழிவுப் பணி தொடர்ந்தால்
அழியப் போவது உன் இனம்தான்
எச்சரிக்கை!

This Poem says about the Nature's Warning to Mankind for we had destroyed Nature's beauty and resources.

இளைஞனே புறப்படு!

இளைஞனே புறப்படு!


அறியாமை நோயால்
ஆமை ஓட்டுக்குள்
அடங்கி கிடக்கும் இளைஞனே புறப்படு!

நீ முயன்றால்
நீலவானமும் தூரமல்ல!
நினைத்ததை முடிக்க இளைஞனே புறப்படு!

தூங்கும் சமூகத்தை
தட்டி எழுப்பிட!
தன்னம்பிக்கை கொண்டோனாய் இளைஞனே புறப்படு!

சாதியும் மதமும்
சகதியென மிதித்து!
சாதனை படைத்திட இளைஞனே புறப்படு!

சினிமாவை விடுத்து
சிந்தனையை செதுக்கு!
சிகரமும் தொட்டுவிடும் தூரம்தான்!

காலத்தை வீணாக்கும்
காதலை மறந்து!
வாழ்க்கைக் கல்வியை அறிந்துகொள்!

போதை விடுத்து
போரை நடத்து!- வாழ்க்கை
போரை நடத்த இளைஞனே புறப்படு!

உன் விடியல்தான்
உலகத்தின் விடியல்!
உன் வெற்றிதான்
உன் சமூகத்தின் வெற்றி!!

நீ நடத்தும் உண்மைப்போரில்
அநீதிகள் நீராவிஆகட்டும்!

நீ நடத்தும் கொள்கைப்போரில்
கொள்கையற்ற கூட்டம் கூண்டோடு அழியட்டும்!

நீ நடத்தும் பகுத்தறிவுப் போரில்
அறியாமை இருள் அழிந்து போகட்டும்!!

நீ நடத்தும் சமத்துவப் போரில்
தாழ்வுகள் தாழ்ந்துப்போகட்டும்!!

புறப்படு!!

அறிவுத்தேரில்
தன்னம்பிக்கையைத் தேரோட்டியாய்
உண்மையைச் சக்கரங்களாய் கொண்டு

இவ்வுலகை வென்றிடப் புறப்படு!


- ம.வீ.கனிமொழி

This Poem says how the youth must be vigorous and work hard for the upliftment of the society.

வெற்றிக்கொண்டாட்டம்!!

கரடுமுரடான சாலைகள்
எங்கும் பாறைகள்
பரவிக்கிடக்கும் காடுகள்
இவற்றை மாற்றிட
உழைத்த கைகளின் கொண்டாட்டம்!!

தன்னலம் கருதா கூட்டத்தின் கொண்டாட்டம்!!
வியர்வைக் கடலில் மிதக்கும் கூட்டத்தின் மகிழ்ச்சிக்கொண்டாட்டம்!!
பிறர்வாழ்வு ஒளிர்ந்திட தன்னை உருக்கும்
உழைப்பு மெழுகுவர்த்திகளின் உணர்ச்சிக்கொண்டாட்டம்!!
நாடு செழிக்கத்தன் உதிரத்தை சிந்திடும் கூட்டத்தின் கொண்டாட்டம்!!
சிதைந்த தேசத்தையும் உழைப்பால் உன்னதமாக்கும்
சிங்க கூட்டத்தின் கொண்டாட்டம்!!
தாழ்வு நீங்க உரிமையை வென்றெடுத்த
தன்மான சின்னத்தின் கொண்டாட்டம்!!
குருதி ஆறு ஓடிடினும்
உயிர் பிரிந்திடினும்
கொள்கை குன்றா கூட்டத்தின் கொண்டாட்டம்!!
உழைக்கும் மக்களின் கொண்டாட்டம்!!
எண்ணத்தால் உயர்ந்தோரின் கொண்டாட்டம்!!
சுதந்திரகாற்றை சுவாசிக்கும் கொண்டாட்டம்!!
சமத்துவத்தை பறைசாற்றும் கொண்டாட்டம்!!

மேதின கொண்டாட்டம்!!

இக்கொண்டாட்டத்தில்-

அழியட்டும் ஆணவச்சக்திகள்!
அழியட்டும் முதலாளித்துவம்!
அழியட்டும் தாழ்வுகள்!

வளரட்டும் சமதர்மம்!
வளரட்டும் பொதுநலம்!
ஓங்கட்டும் தொழிலாளர் ஒற்றுமை!!

This Poem says about the Importance of May Day!!
- ம.வீ. கனிமொழி

வேண்டும் புதிய மனிதம்!!

உருவத்தில் மனிதனாய்
உள்ளத்தில் மிருகமாய்
வாழும் மனிதம்
ஒழிந்து வேண்டும் புதிய மனிதம்!!

மதத்தை மார்போடும்
சாதியை சாவிலும்விடாது
கல்லாய் வாழும் மனிதம்
கல்லறைக்குள் அடங்கி வேண்டும் புதிய மனிதம்!!

தன்னலம் தசையோடு கொண்டு
திண்ணமும் பொதுநலம் எண்ணா
பிணத்திண்ணிகள் மண்ணோடு
புதைந்து வேண்டும் புதிய மனிதம்!!

பலரின் உழைப்பின் பலனால்
பணத்தோடு நாளும் அலைந்திடும்
பண்பில்லா பண முதலைகள்
மடிந்து வேண்டும் புதிய மனிதம்!!

உழைப்போரை தாழ்த்தி
பிறர் உழைப்பில் உடல்
வளர்த்து ஏய்த்துப்பிழைப்போரின்
ஆனவம் சரிந்து வேண்டும் புதிய மனிதம்!!

பெண்னை போகப்பொருளாய்
உணர்வற்ற உயிராய்
ஊழியம் செய்யும் அடிமையாய்
காணும் பார்வை கருகி வேண்டும் புதிய மனிதம்!!

பழக்கம் என்பதில்
ஒழுக்கம் இன்றி
வாழும் மனித
வவ்வால்கள் மறைந்து வேண்டும் புதிய மனிதம்!!

கொள்கை அற்று
எப்படியும் வாழும்
நேரம் தக்கபடி நிறங்கள்
மாற்றும் மனிதஓநாய்கள் மறைந்து வேண்டும் புதிய மனிதம்!!

ஆம்!

மனிதனை மனிதனாய்
உள்ளன்போடு
மதம் மறந்து
சாதி கடந்து
இனம் இன்றி,
தாழ்வு எண்ணா
மனிதப் பண்போடு
நேசிக்கும் மனிதன் வேண்டும்!
வேண்டும் புதிய மனிதம்!!

ம.வீ.கனிமொழி

This Poem explains regarding the need for new Humane with humanism and care for others.

வாழ்க்கைப்பாதையில்...

வாழ்க்கைப் பாதையில்
பயணிக்கும் பயணங்கள் யாவும்
பயனளிப்பதாய்,
சுகமாய்
அமைவதில்லை - ஆனால்
சுமைகளை
சுக்களாய் உடைக்கும்
நெஞ்சுரம் வேண்டும்!!

காணும் மனிதர்
யாவரும்
மனம்போல் நடக்காவிடினும்
அனைவரையும் அரவணைக்கும்
பக்குவம் வேண்டும்!

அனைத்தும் விதி செயல்
என்று பழையதை
பேசி காலம்கடத்தா
நுண்ணறிவு பெற்று விதியை
மதியால் வென்றிட வேண்டும்!!

சீறிவரும் அலையாய் துன்பங்கள்
வரினும் துவளாமல்
பாறையாய் எதிர்த்து நின்று
வெப்பம் கண்ட பனியாய்
துன்பத்தை உருக்கிட வேண்டும்!!

வாழ்க்கைப் பாதையில்
கண்ணாடி துகல்களாய் வேதனை
நேரிடினும்
கண்ணீர் மறந்து
கடமையைச் செய்யத்தொடங்கு!!


தந்திரம் செய்வோரை
தன்னம்பிக்கை கொண்டு
தரைமட்டமாக்கு!
கண்ணியத்தோடு செயல்படத்தொடங்கு!!

நேர்மையை குருதியுடனும்!
கட்டுப்பாட்டினை இதயத்துடிப்புடனும்!
எளிமையை தோற்றத்துடனும்!
மனவலிமையை சுவாசத்துடனும்!
வாழ்க்கைப் பாதையில் கொண்டால்
வாழ்க்கைப் பாதையில்
வெற்றி மட்டுமல்ல!
அமைதியும் நிரம்பிடும்
வண்ணச் சோலையாக
மணம் வீசும்!!

- ம.வீ. கனிமொழி


This Poem describes that in the path of life there would be many difficulties, we will meet different people who ignores us but still we need to fight with confidence then our life would be filled with victory and fragrance...

கவிதை துளிகள்!!

கண்கள்

வெள்ளைத் தாமரைக்குள்
விழுந்தாடும் இருகருவண்டுகள்!!

மனது

பாரமாய் இருக்கும்போது
பாய்மரமாய் தள்ளாடும்!
மகிழ்ச்சியில் பம்பரமாய்ச்சுற்றும் , பட்டாம்பூச்சியாய்
பறக்கும் விசித்திர காந்தம்!!



கல்லறை

காற்றும் புகாமல் மனிதனை
அமைதியாய் உறங்கவைக்கும்
கற்கட்டில்!!


வீடு

வீதியோரம் இதனை தேடுவோர்
இருக்க - சிலருக்கு
இது ஆடம்பரச்சின்னம்!!

ஒரு தாயின் தாலாட்டு!!

பத்து மாசம் நான் சுமந்து
பெத்த என் தங்க மகளே
என் வம்சம் தழைக்க
என் மகளாய் வந்த அரும்பே!
என் துன்பம் தூளாக
என் மடியில் பூத்த குறிஞ்சியே!
என் கனவு பலநூறு
நனவாக வந்த அஞ்சுகமே!!
தாயின் தாலாட்டை கேள் தங்க மகளே!!
கண்ணுறக்கம் கொண்டாலும்
கருத்துறக்கம் கொள்ளாதே என்
செல்வ மகளே!!

பட்டப்படிப்பு நீயும்தான் படிச்சிடனும்
சமுதாயப்பணி நீயும்தான் செஞ்சிடனும்
அநீதிகளை எதிர்த்து நின்னு அழிச்சிடனும்

நாணம் அணிகலன் என்போரை
நாணிட செய்திடனும் விவேகத்தால்!

அச்சம் பெண்ணுக்கழகு என்போரை
அஞ்சிட வைத்திடனும் வீரத்தால்!!

மடம் பெண்ணுக்குரியது என்போரை
மடமைச் சேற்றிலிருந்து ஏத்திடனும் அறிவால்!!

அழகு தன்னம்பிக்கை
என உளறும் மூடர்களுக்கு
அறிவுதான் அழகுஎன பறைசாற்றிடனும்!!

மூடப்பழக்கும் மண்மூடிப்போக
பகுத்தறிவுச்சுடர் ஏந்திடனும்!!

எதிர்வரும் துன்பம் துவண்டிட
தூணாய் நிந்திடனும்!
நிழலாய் வாழ்ந்திடனும்!

பெண் என்றால் பொறுமை மட்டுமல்ல
பெருமையும் என எடுத்துகாட்டிடனும்!!

உன் தாய்நாட்டு உயர்வில்
உன் பங்குதனைப்பார்த்து
பூரிப்படையனும் தங்க மகளே!!

பத்து மாசம் நான் சுமந்து
பெத்த என் தங்க மகளே
என் வம்சம் தழைக்க
என் மகளாய் வந்த அரும்பே!
என் துன்பம் தூளாக
என் மடியில் பூத்த குறிஞ்சியே!
என் கனவு பலநூறு
நனவாக வந்த அஞ்சுகமே!!
தாயின் தாலாட்டை கேள் தங்க மகளே!!
கண்ணுறக்கம் கொண்டாலும்
கருத்துறக்கம் கொள்ளாதே என்
செல்வ மகளே!!

This Poem describes about a Mother's ambition about her girl Child.

காமராசர்

விருதுநகர் தந்திட்ட விருதே!
நாட்டிற்கு அயராது உழைத்த செம்மலே!
கருப்பு காந்தியாய் தென்னாட்டில்
காரிருள் அகற்றிய மெழுகுவர்த்தியே!
குலக்கல்வி திட்டத்தை தகர்த்து
அனைவர்க்கும் கல்வியைத் தந்திட்ட குணக்குன்றே!
ஏழையின் கண்ணீரை
ஏந்திட்ட கண்ணிய வேந்தே!
தொண்டுள்ளத்தின் சிகரமே!
ஏர்பிடித்த கைதனை
எழுதுகோல் ஏந்த வைத்த கல்விக்கொடையே!
ஒடுக்கப்பட்டோர் துன்பத்தை
போக்கிட உழைத்த தியாகச்சுடரே!
கஞ்சி குடிப்பதற்கில்லார்க்கு
சத்துணவு அளித்த வள்ளலே!
பேதையாய் வாழ்ந்தோரை
மேதையாய் உலவிடச்செய்த படிக்காமேதையே!!
பலரின் வாழ்க்கைப்பாதையில் ஒளியேற்றிய தீபமே!
நாட்டின் தலைவர்களை உருவாக்கிய
ராசரே! காமராசரே!
பூமியின் சுழற்சி நிற்பினும்
நின் நினைவு மறையாது!
நின் புகழ் குன்றாது!
வாழ்க நின் தொண்டு!!

This poem describes the Great deeds done by Kamarajar Former Chief Minister of Tamil Nadu. This Poem was written in memory of His 105th Birthday celebrated on July 15th.

Kamarajar was popularly called as King Maker.

ஆழ் கடலும் ...

ஆழ் கடலும் சில நேரம்
அமைதி கொள்ளும்- ஆனால்
காதல் தோல்வியுற்ற மனம்
கனவிலும் அமைதி கொள்வதில்லை!

என்றான் காதலில் தோல்வியுற்ற வாலிபன்

தம்பி,

ஆழ் கடலும் சில நேரம்
அமைதி கொள்ளும்- ஆனால்
காதல் பெயரால்
கடமை மறந்து
கண்ணியம் விடுத்து
வாழ்வினை வீணடிக்கும் நீ!! -உன்
பெற்றோரின் மனது
ஆழ் கடலின் சூறாவளியாய்
கொதிக்கும் தீப்பிழம்பாய்
குமறும் எரிமலையாய்
புழுவாய் துடிப்பதை
அறிவாய்!!
உன் ஏற்றம் காண
ஏங்கும் உள்ளங்களை
துயரில் ஆழ்த்தாமல்
துன்பத்தை தகர்த்து
சாதிக்க புறப்படு!!

காதல் சரித்திரம்
பின்பு படைக்கலாம்!-புது
சரித்திரம் படைத்திட
புறப்படு!!

மாற்றத்தை ஏற்றிடு!!

மாற்றமில்லா வாழ்வு
அமைதியான வாழ்வு
துன்பமற்ற வாழ்வு-எப்பொழுதும்
வாழநினைக்கும் மனிதன்
வையத்தில் ஏமாளி!!

சார்ந்திருத்தல் மனிதயில்பு-ஆனால்
சார்ந்திருப்பவை என்றும் மாறாதிருக்கா!!


இழப்பு - இயற்கையின் நீதி!
பிரிவு - வாழ்வியலின் அடிப்படை!

இந்த இயற்கைநீதியின் தெரிதல்
மனித வாழ்வின் தொடக்கம்!

இந்த வாழ்வியலின் புரிதல்
மனித வாழ்வின் தொடர்ச்சி!

மாற்றம் இல்லா வையகம் ஏது?

பூமியின் சுழற்சி
சீரிடும் கடல்
மின்னும் நட்சத்திரம்
ஒளிர்ந்திடும் நிலவு
ஓடும் நதி
மலர்ந்திடும் மொட்டு-என
அனைத்துமே மாற்றம் பெற்றவை!
மாற்றம் பெறக்கூடியவை!


மாற்றம் மிரட்டும்!- எதிர்நின்று
மாற்றத்தை ஏற்றிடு!

மனதை மகிழ்ச்சியின் ஊற்றாய்
மனிதத்தை உயிராய்
சமத்துவம் சுவாசமாய்
துணைகொண்டு மாற்றத்தை ஏற்றிடு!

அவனியின் உயிர்கள் - எப்பொழுதும்
ஆனந்தத்தில் வாழ்வதில்லை

போராட்டத்தின் நடுவிலே
புதுசுதந்திரம் பூத்திடும்!

மாற்றத்தின் மத்தியில்
மானிட உயிர்கள் வாழ்ந்திடும்!

மாற்றம் நிரந்திரம்-என்ற
நிரந்திர தாரகமந்திரம்தனை
நெஞ்சத்தில் ஏற்று
மாற்றத்தை ஏற்றிடு!!

இருள் வானில்
புது விடிவெள்ளியாய்
சமுதாய புரட்சிக்கு வித்திட்டு
மாற்றத்தை ஏற்று
மாற்றத்தை தந்திடு!

This poem explains that nothing is permanent except change and man has to adapt to it.

முதிர்ந்த கோடுகளாய்...!!

பள்ளிக்கூட மணி அடித்தது!
பார்வையில் ஏக்கம் தேங்கிட
புத்தகம் ஏந்திடும் சிறார்களை
வெறுமையோடு நோக்கிய இருகண்களில்
கண்ணீர்த் துளிகள்!

ஆசையாய் இருந்தது
அவனுக்கும்!
அம்மாவின் உணவோடு
அப்பாவின் அரவணைப்பில்
பள்ளியில் நுழைந்திட!

காலை வணக்கப்பாடல்
காதில் ஒலித்தது!-ஆனால்
அவன் வயிற்றுப் பசி
காதை அடைத்தது!!

அந்த பிஞ்சுக் கால்கள்
பின் நோக்கி நடந்தன
மண் சுமக்க!!

பசியின் வாட்டத்திலும்
ஏக்க ரேகை
அவனின் முகத்தில்
முதிர்ந்த கோடுகளாய்...!!

This Poem explains a child who is involved in child labor but who's desire is to study and his emotions when he sees other children of his age marching to school.

மனசு வலிக்குதடி...

மனசு வலிக்குதடி...


கண்ணால் பேசியவளே - என்னை
கட்டிப் போட்ட இளமானே
காதல் கீதம் கற்றுத்தந்த
கட்டழகு பெட்டகமே!


மனசெல்லாம் நிறைஞ்சிருந்த என்
இதயத்தின் இணையில்லா இராணியே
இதழ் விரித்து சிரிக்கும்
முத்துப்பல் அஞ்சுகமே!!


சின்னத அடிபட்டாலும் உன்
சிந்தை துடிப்புல அன்பை
சிந்திய என் காதல்சிந்தாமணியே!


உன்னை பார்த்ததாலே உன்
உருவம் கண்ணுல பதிஞ்சதாலே
உறங்க மறுக்குதடி கண்கள்!!

வச்ச கண்ணு வாங்காம
நீ பாத்திடும் பார்வையால
என் உசிர தொட்டவளே!!

பூமி இது சுத்தறது நின்னாலும்
பூவாய் பூத்த காதல்
புயலாலும் உதிராதுன்னு
சொன்ன என்னவளே!

சொன்ன வார்த்தை
என்ன ஆச்சு!
காத்துல தான் உதிர்ந்தாச்சா?

பெத்தவங்களுக்காக காதல
தியாகம்தான் செய்தாச்சா?

பேசின வார்த்தையெல்லாம் நெஞ்சுல
புதஞ்சு கிடக்குதடி!

மண்ணுக்குள்ள புதஞ்சாலும்
மங்கை உன் முகம்
மனச விட்டு மறையாதடி!

காதல் பாட்டு நான் பாட
காதில் நீயும்தான் போடமறுத்தா
கண்ணீரும் கண்ணோரம் வழியுதடி!

எதையும் தாங்கும் இதயம்தான்-ஆனாலும்
பிரிவு வலியை இதயந்தான் தாங்காமல்
மனசு வலிக்குதடி!

சிறுபிள்ளை விளையாட்டாய்
முடிஞ்சுபோன காதலைத்தான்
நினைக்கையிலே
கரையில துள்ளுற மீனாய்த்தான்
மனம் புழுபோல துடிக்குதடி!
பாய்மரமாய் தள்ளாடுதடி!

பெண்ணே உன்ன நினைக்கையிலே
மனசு வலிக்குதடி...

This Poem describes about a guy's feeling on his Lost Love...

பயணங்கள் தொடர்வோம்...

கள்ளமில்லா உயிர்கள்
களவாடப்பட்டது!
கருணையற்ற கள்வர்களால்!

குருதி ஓட்டத்தில்
சுதந்திரம் பிறப்பதில்லை
தீப்பந்தம் அகல்விளக்காவதில்லை!

பாலைவனத்தை சோலைவனமாக்குவதே
புரட்சி!

தீமையை பொசுக்க
தீவிரவாதம் தீர்வில்லை!

தீவிரவாதம் சமுதாய
பக்கவாதம்!

மக்களின் கண்ணீரில்
மாளிகை கட்டப்படுவதில்லை!

மனிதத்தால் மாற்றம்
காண்பதே அறிவு!

மனிதம் தழைக்க
மதம் தடையென்றால்
மதத்தை விடுத்து
மனிதத்தை மனதில்
பதித்து
தீவிரவாத தீயை
தீர்க்கமாய் தீர்க்க
உணர்ச்சிப் பிழம்பாய்
பயணங்கள் தொடர்வோம்...

This Poem was written when the blast took place at Hyderabad... It depicts the need to abolish Terrorism...

இருள் வானில் புரட்சி மின்னலாய்...

இருள் வானில்
புரட்சி மின்னலாய்
தோன்றிய ஈரோட்டுச் சங்கநாதமே!


ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின்
கூன் நிமிர்த்திட்ட
வெண்தாடி வேந்தரே!

ஆணாதிக்க சமுதாயத்தில்
பெண்ணினத்தின் அடிமைவிலங்கை
உடைத்த திராவிடத்தந்தையே!

மூடத்தனத்தில் மூழ்கிப்போன
சமுதாயத்தை அறுவைசிகிச்சை
செய்த சமூகமருத்துவரே!

ஆதிக்கத்தின் அடிபீடத்தை
ஆணிவேரை அடியோடு
அறுத்திட்ட விடிவெள்ளியே!

படமெடுத்து ஆடிய
சாதிப்பாம்பை தடிகொண்டு
விரட்டிய சரித்திர நாயகரே!

அறிவிற்கு விலங்கிட்ட
சிறுநரிகளை உன் சிம்மக்குரலால்
கதிகலங்க செய்த எங்கள் அய்யாவே!


வயிற்றுவலி உயிர்குடித்தபோதும்
சூறாவளியாய் சுழன்று
மானத்தை மீட்டுத்தந்த கருப்புச்சிங்கமே!

இனமானம் காத்திட
இடியாய் முழங்கிய
செந்தமிழ்நாட்டின் சிந்தனை சிற்பியே!

தள்ளாத வயதிலும்
தள்ளாடிய சமுகத்தை
நின்பலம்கொண்டு தலைநிமிர்த்தினாய்!


வாழ்க நின் புகழ்
வளர்க வையம் நின்
பகுத்தறிவு பாதையில்!!

This Poem describes the great deeds of Thanthai Periyar - Socartes of South India on behalf of his 129th Birthday celebrated today.(September 17th)

கவிதை துளிகள்!!

புரட்சி

மக்களை புண்ணாக்கும் விதிகளை
மண்ணோடு மண்ணாக்கும்
வீரத்தின்
பொதுநலத்தின்
விவேகத்தின்
ஆயுதம்!!


கண்ணீர்

மனித துன்பத்தின்
விலையில்லா மருந்து!
கடல் நீரும் - கண்ணீரும் ஒன்றுதான்
ஆம்!

கடல் நீர் கரிக்கும்
கரையை அரிக்கும்
கண்ணீரும் கரிக்கும்
கவலையை அரிக்கும்!!


காதல்

சில எதிர்பார்ப்புகளில்
கட்டப்படும் வாழ்க்கை
கட்டிடம்!

புயலில் புரண்டும்விடலாம்
இடியில் இடிந்தும்விடலாம்
சுனாமியால் அழிந்தும்விடலாம்
அட!!
இவையெல்லாம்
காதலர்களுக்குத்தான்!
இது
சாகாவரம் பெற்று
பலரை சாகடித்துக்கொண்டிருக்கும்
விந்தையான உணர்வு!!

Sunday, November 4, 2007

நினைவிருக்கட்டும் பெண்ணே...


வாழ்க்கைப் பாதையில்
வல்லூறுகள் பயமுறுத்தும்
மெல்லினமாய் நீயிருந்தால்
வல்லினமாய் மாறிடு !!
துன்பத்தின் நிழலும்
தூரமாய் உனைவிட்டோடும்!!
உன் அடையாளம்
அழிக்கத் துணியும் சில
ஆதிக்க கோட்டான்களை
அவனியின் மூலையிலும்
உலவ விடாதே !
உன் புன்னகை
போதை! - என உளறும்
சில பித்தன்கள்மத்தியில்- உன்
புன்னகைத் தென்றல்
புரட்சிப்புயலாய் மாறட்டும்!!
உன் விழியிரண்டும்
வேல் என வர்ணிக்கும்
மூடர்களுக்கு - வேலின்
கூர்மையை உணர்த்திடு !
உன் அடிமைவிலங்கு
உடைக்கப்படும் என
காத்திராதே மயிலே!!
இறகைபிடுங்க
வருவார் சிலர்!!
ஆதிகத்தின் உடும்புபிடியை
ஈரோட்டுச் சம்மட்டியால்
உடைத்து,
உனைச்சுற்றி பின்னிடப்படும்
சதியை உன் மதியால் வென்றிடு !
கதி உனக்கிலை என
கழறும் கபடர்களை
சகதியில் மிதித்து
அவனியை வென்றிட புறப்படு!
சாதிக்கவே உன் பிறப்பு
நினைவிருக்கட்டும் பெண்ணே...

இரவு 10!!

காலையில் கண்விழிப்பு
கால்கடுக்க குடும்பவேலை
அழுதிடும் குழந்தைக்கு ,
ஆர்பரிக்கும் கணவனுக்கு ,
அல்லும்பகலும் சேவைசெய்து
அலுப்பாய் வந்தமர்ந்தாள்!!
கடிகாரம் ஒலித்தது
இரவு 10!!

கவிதை துளிகள் !!

வெடி
காசினை கரைக்கவில்லை
கரியாக்குகின்றோம்!!

சரவெடி

பட்டினி கிடப்போர்
சரமாய் வீதியோரங்களில்!
சரவெடி வெடித்தது சிலர்
வீடுகளின் முற்றத்தில்,
ஆடம்பரத்தின் சரமாய் சரவெடி !!


இடஒதுக்கீடு!!

பிச்சையல்ல
உரிமையின்
உணர்சிக்குரல்!!

Saturday, November 3, 2007

வீரவணக்கம் வீரவணக்கம்!!

வீரவணக்கம் வீரவணக்கம்!!
புரட்சி தளபதியே வீரவணக்கம்!
ஈழத்து சிங்கமே வீரவணக்கம்!
சுதந்திர காற்றை சுவாசிக்கும் வரை
கண்களில் தூக்கம் இல்லை
சிந்திய உன் உதிரத்தின் மீது ஆணை
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!!