Tuesday, November 6, 2007

ஒரு தாயின் தாலாட்டு!!

பத்து மாசம் நான் சுமந்து
பெத்த என் தங்க மகளே
என் வம்சம் தழைக்க
என் மகளாய் வந்த அரும்பே!
என் துன்பம் தூளாக
என் மடியில் பூத்த குறிஞ்சியே!
என் கனவு பலநூறு
நனவாக வந்த அஞ்சுகமே!!
தாயின் தாலாட்டை கேள் தங்க மகளே!!
கண்ணுறக்கம் கொண்டாலும்
கருத்துறக்கம் கொள்ளாதே என்
செல்வ மகளே!!

பட்டப்படிப்பு நீயும்தான் படிச்சிடனும்
சமுதாயப்பணி நீயும்தான் செஞ்சிடனும்
அநீதிகளை எதிர்த்து நின்னு அழிச்சிடனும்

நாணம் அணிகலன் என்போரை
நாணிட செய்திடனும் விவேகத்தால்!

அச்சம் பெண்ணுக்கழகு என்போரை
அஞ்சிட வைத்திடனும் வீரத்தால்!!

மடம் பெண்ணுக்குரியது என்போரை
மடமைச் சேற்றிலிருந்து ஏத்திடனும் அறிவால்!!

அழகு தன்னம்பிக்கை
என உளறும் மூடர்களுக்கு
அறிவுதான் அழகுஎன பறைசாற்றிடனும்!!

மூடப்பழக்கும் மண்மூடிப்போக
பகுத்தறிவுச்சுடர் ஏந்திடனும்!!

எதிர்வரும் துன்பம் துவண்டிட
தூணாய் நிந்திடனும்!
நிழலாய் வாழ்ந்திடனும்!

பெண் என்றால் பொறுமை மட்டுமல்ல
பெருமையும் என எடுத்துகாட்டிடனும்!!

உன் தாய்நாட்டு உயர்வில்
உன் பங்குதனைப்பார்த்து
பூரிப்படையனும் தங்க மகளே!!

பத்து மாசம் நான் சுமந்து
பெத்த என் தங்க மகளே
என் வம்சம் தழைக்க
என் மகளாய் வந்த அரும்பே!
என் துன்பம் தூளாக
என் மடியில் பூத்த குறிஞ்சியே!
என் கனவு பலநூறு
நனவாக வந்த அஞ்சுகமே!!
தாயின் தாலாட்டை கேள் தங்க மகளே!!
கண்ணுறக்கம் கொண்டாலும்
கருத்துறக்கம் கொள்ளாதே என்
செல்வ மகளே!!

This Poem describes about a Mother's ambition about her girl Child.

No comments: