Tuesday, November 6, 2007

முதிர்ந்த கோடுகளாய்...!!

பள்ளிக்கூட மணி அடித்தது!
பார்வையில் ஏக்கம் தேங்கிட
புத்தகம் ஏந்திடும் சிறார்களை
வெறுமையோடு நோக்கிய இருகண்களில்
கண்ணீர்த் துளிகள்!

ஆசையாய் இருந்தது
அவனுக்கும்!
அம்மாவின் உணவோடு
அப்பாவின் அரவணைப்பில்
பள்ளியில் நுழைந்திட!

காலை வணக்கப்பாடல்
காதில் ஒலித்தது!-ஆனால்
அவன் வயிற்றுப் பசி
காதை அடைத்தது!!

அந்த பிஞ்சுக் கால்கள்
பின் நோக்கி நடந்தன
மண் சுமக்க!!

பசியின் வாட்டத்திலும்
ஏக்க ரேகை
அவனின் முகத்தில்
முதிர்ந்த கோடுகளாய்...!!

This Poem explains a child who is involved in child labor but who's desire is to study and his emotions when he sees other children of his age marching to school.

No comments: