Tuesday, November 6, 2007

வாழ்க்கைப்பாதையில்...

வாழ்க்கைப் பாதையில்
பயணிக்கும் பயணங்கள் யாவும்
பயனளிப்பதாய்,
சுகமாய்
அமைவதில்லை - ஆனால்
சுமைகளை
சுக்களாய் உடைக்கும்
நெஞ்சுரம் வேண்டும்!!

காணும் மனிதர்
யாவரும்
மனம்போல் நடக்காவிடினும்
அனைவரையும் அரவணைக்கும்
பக்குவம் வேண்டும்!

அனைத்தும் விதி செயல்
என்று பழையதை
பேசி காலம்கடத்தா
நுண்ணறிவு பெற்று விதியை
மதியால் வென்றிட வேண்டும்!!

சீறிவரும் அலையாய் துன்பங்கள்
வரினும் துவளாமல்
பாறையாய் எதிர்த்து நின்று
வெப்பம் கண்ட பனியாய்
துன்பத்தை உருக்கிட வேண்டும்!!

வாழ்க்கைப் பாதையில்
கண்ணாடி துகல்களாய் வேதனை
நேரிடினும்
கண்ணீர் மறந்து
கடமையைச் செய்யத்தொடங்கு!!


தந்திரம் செய்வோரை
தன்னம்பிக்கை கொண்டு
தரைமட்டமாக்கு!
கண்ணியத்தோடு செயல்படத்தொடங்கு!!

நேர்மையை குருதியுடனும்!
கட்டுப்பாட்டினை இதயத்துடிப்புடனும்!
எளிமையை தோற்றத்துடனும்!
மனவலிமையை சுவாசத்துடனும்!
வாழ்க்கைப் பாதையில் கொண்டால்
வாழ்க்கைப் பாதையில்
வெற்றி மட்டுமல்ல!
அமைதியும் நிரம்பிடும்
வண்ணச் சோலையாக
மணம் வீசும்!!

- ம.வீ. கனிமொழி


This Poem describes that in the path of life there would be many difficulties, we will meet different people who ignores us but still we need to fight with confidence then our life would be filled with victory and fragrance...

No comments: