இளைஞனே புறப்படு!
அறியாமை நோயால்
ஆமை ஓட்டுக்குள்
அடங்கி கிடக்கும் இளைஞனே புறப்படு!
நீ முயன்றால்
நீலவானமும் தூரமல்ல!
நினைத்ததை முடிக்க இளைஞனே புறப்படு!
தூங்கும் சமூகத்தை
தட்டி எழுப்பிட!
தன்னம்பிக்கை கொண்டோனாய் இளைஞனே புறப்படு!
சாதியும் மதமும்
சகதியென மிதித்து!
சாதனை படைத்திட இளைஞனே புறப்படு!
சினிமாவை விடுத்து
சிந்தனையை செதுக்கு!
சிகரமும் தொட்டுவிடும் தூரம்தான்!
காலத்தை வீணாக்கும்
காதலை மறந்து!
வாழ்க்கைக் கல்வியை அறிந்துகொள்!
போதை விடுத்து
போரை நடத்து!- வாழ்க்கை
போரை நடத்த இளைஞனே புறப்படு!
உன் விடியல்தான்
உலகத்தின் விடியல்!
உன் வெற்றிதான்
உன் சமூகத்தின் வெற்றி!!
நீ நடத்தும் உண்மைப்போரில்
அநீதிகள் நீராவிஆகட்டும்!
நீ நடத்தும் கொள்கைப்போரில்
கொள்கையற்ற கூட்டம் கூண்டோடு அழியட்டும்!
நீ நடத்தும் பகுத்தறிவுப் போரில்
அறியாமை இருள் அழிந்து போகட்டும்!!
நீ நடத்தும் சமத்துவப் போரில்
தாழ்வுகள் தாழ்ந்துப்போகட்டும்!!
புறப்படு!!
அறிவுத்தேரில்
தன்னம்பிக்கையைத் தேரோட்டியாய்
உண்மையைச் சக்கரங்களாய் கொண்டு
இவ்வுலகை வென்றிடப் புறப்படு!
- ம.வீ.கனிமொழி
This Poem says how the youth must be vigorous and work hard for the upliftment of the society.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment