Tuesday, November 6, 2007

மாற்றத்தை ஏற்றிடு!!

மாற்றமில்லா வாழ்வு
அமைதியான வாழ்வு
துன்பமற்ற வாழ்வு-எப்பொழுதும்
வாழநினைக்கும் மனிதன்
வையத்தில் ஏமாளி!!

சார்ந்திருத்தல் மனிதயில்பு-ஆனால்
சார்ந்திருப்பவை என்றும் மாறாதிருக்கா!!


இழப்பு - இயற்கையின் நீதி!
பிரிவு - வாழ்வியலின் அடிப்படை!

இந்த இயற்கைநீதியின் தெரிதல்
மனித வாழ்வின் தொடக்கம்!

இந்த வாழ்வியலின் புரிதல்
மனித வாழ்வின் தொடர்ச்சி!

மாற்றம் இல்லா வையகம் ஏது?

பூமியின் சுழற்சி
சீரிடும் கடல்
மின்னும் நட்சத்திரம்
ஒளிர்ந்திடும் நிலவு
ஓடும் நதி
மலர்ந்திடும் மொட்டு-என
அனைத்துமே மாற்றம் பெற்றவை!
மாற்றம் பெறக்கூடியவை!


மாற்றம் மிரட்டும்!- எதிர்நின்று
மாற்றத்தை ஏற்றிடு!

மனதை மகிழ்ச்சியின் ஊற்றாய்
மனிதத்தை உயிராய்
சமத்துவம் சுவாசமாய்
துணைகொண்டு மாற்றத்தை ஏற்றிடு!

அவனியின் உயிர்கள் - எப்பொழுதும்
ஆனந்தத்தில் வாழ்வதில்லை

போராட்டத்தின் நடுவிலே
புதுசுதந்திரம் பூத்திடும்!

மாற்றத்தின் மத்தியில்
மானிட உயிர்கள் வாழ்ந்திடும்!

மாற்றம் நிரந்திரம்-என்ற
நிரந்திர தாரகமந்திரம்தனை
நெஞ்சத்தில் ஏற்று
மாற்றத்தை ஏற்றிடு!!

இருள் வானில்
புது விடிவெள்ளியாய்
சமுதாய புரட்சிக்கு வித்திட்டு
மாற்றத்தை ஏற்று
மாற்றத்தை தந்திடு!

This poem explains that nothing is permanent except change and man has to adapt to it.

No comments: