விருதுநகர் தந்திட்ட விருதே!
நாட்டிற்கு அயராது உழைத்த செம்மலே!
கருப்பு காந்தியாய் தென்னாட்டில்
காரிருள் அகற்றிய மெழுகுவர்த்தியே!
குலக்கல்வி திட்டத்தை தகர்த்து
அனைவர்க்கும் கல்வியைத் தந்திட்ட குணக்குன்றே!
ஏழையின் கண்ணீரை
ஏந்திட்ட கண்ணிய வேந்தே!
தொண்டுள்ளத்தின் சிகரமே!
ஏர்பிடித்த கைதனை
எழுதுகோல் ஏந்த வைத்த கல்விக்கொடையே!
ஒடுக்கப்பட்டோர் துன்பத்தை
போக்கிட உழைத்த தியாகச்சுடரே!
கஞ்சி குடிப்பதற்கில்லார்க்கு
சத்துணவு அளித்த வள்ளலே!
பேதையாய் வாழ்ந்தோரை
மேதையாய் உலவிடச்செய்த படிக்காமேதையே!!
பலரின் வாழ்க்கைப்பாதையில் ஒளியேற்றிய தீபமே!
நாட்டின் தலைவர்களை உருவாக்கிய
ராசரே! காமராசரே!
பூமியின் சுழற்சி நிற்பினும்
நின் நினைவு மறையாது!
நின் புகழ் குன்றாது!
வாழ்க நின் தொண்டு!!
This poem describes the Great deeds done by Kamarajar Former Chief Minister of Tamil Nadu. This Poem was written in memory of His 105th Birthday celebrated on July 15th.
Kamarajar was popularly called as King Maker.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment