உருவத்தில் மனிதனாய்
உள்ளத்தில் மிருகமாய்
வாழும் மனிதம்
ஒழிந்து வேண்டும் புதிய மனிதம்!!
மதத்தை மார்போடும்
சாதியை சாவிலும்விடாது
கல்லாய் வாழும் மனிதம்
கல்லறைக்குள் அடங்கி வேண்டும் புதிய மனிதம்!!
தன்னலம் தசையோடு கொண்டு
திண்ணமும் பொதுநலம் எண்ணா
பிணத்திண்ணிகள் மண்ணோடு
புதைந்து வேண்டும் புதிய மனிதம்!!
பலரின் உழைப்பின் பலனால்
பணத்தோடு நாளும் அலைந்திடும்
பண்பில்லா பண முதலைகள்
மடிந்து வேண்டும் புதிய மனிதம்!!
உழைப்போரை தாழ்த்தி
பிறர் உழைப்பில் உடல்
வளர்த்து ஏய்த்துப்பிழைப்போரின்
ஆனவம் சரிந்து வேண்டும் புதிய மனிதம்!!
பெண்னை போகப்பொருளாய்
உணர்வற்ற உயிராய்
ஊழியம் செய்யும் அடிமையாய்
காணும் பார்வை கருகி வேண்டும் புதிய மனிதம்!!
பழக்கம் என்பதில்
ஒழுக்கம் இன்றி
வாழும் மனித
வவ்வால்கள் மறைந்து வேண்டும் புதிய மனிதம்!!
கொள்கை அற்று
எப்படியும் வாழும்
நேரம் தக்கபடி நிறங்கள்
மாற்றும் மனிதஓநாய்கள் மறைந்து வேண்டும் புதிய மனிதம்!!
ஆம்!
மனிதனை மனிதனாய்
உள்ளன்போடு
மதம் மறந்து
சாதி கடந்து
இனம் இன்றி,
தாழ்வு எண்ணா
மனிதப் பண்போடு
நேசிக்கும் மனிதன் வேண்டும்!
வேண்டும் புதிய மனிதம்!!
ம.வீ.கனிமொழி
This Poem explains regarding the need for new Humane with humanism and care for others.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment