Tuesday, November 6, 2007

மனசு வலிக்குதடி...

மனசு வலிக்குதடி...


கண்ணால் பேசியவளே - என்னை
கட்டிப் போட்ட இளமானே
காதல் கீதம் கற்றுத்தந்த
கட்டழகு பெட்டகமே!


மனசெல்லாம் நிறைஞ்சிருந்த என்
இதயத்தின் இணையில்லா இராணியே
இதழ் விரித்து சிரிக்கும்
முத்துப்பல் அஞ்சுகமே!!


சின்னத அடிபட்டாலும் உன்
சிந்தை துடிப்புல அன்பை
சிந்திய என் காதல்சிந்தாமணியே!


உன்னை பார்த்ததாலே உன்
உருவம் கண்ணுல பதிஞ்சதாலே
உறங்க மறுக்குதடி கண்கள்!!

வச்ச கண்ணு வாங்காம
நீ பாத்திடும் பார்வையால
என் உசிர தொட்டவளே!!

பூமி இது சுத்தறது நின்னாலும்
பூவாய் பூத்த காதல்
புயலாலும் உதிராதுன்னு
சொன்ன என்னவளே!

சொன்ன வார்த்தை
என்ன ஆச்சு!
காத்துல தான் உதிர்ந்தாச்சா?

பெத்தவங்களுக்காக காதல
தியாகம்தான் செய்தாச்சா?

பேசின வார்த்தையெல்லாம் நெஞ்சுல
புதஞ்சு கிடக்குதடி!

மண்ணுக்குள்ள புதஞ்சாலும்
மங்கை உன் முகம்
மனச விட்டு மறையாதடி!

காதல் பாட்டு நான் பாட
காதில் நீயும்தான் போடமறுத்தா
கண்ணீரும் கண்ணோரம் வழியுதடி!

எதையும் தாங்கும் இதயம்தான்-ஆனாலும்
பிரிவு வலியை இதயந்தான் தாங்காமல்
மனசு வலிக்குதடி!

சிறுபிள்ளை விளையாட்டாய்
முடிஞ்சுபோன காதலைத்தான்
நினைக்கையிலே
கரையில துள்ளுற மீனாய்த்தான்
மனம் புழுபோல துடிக்குதடி!
பாய்மரமாய் தள்ளாடுதடி!

பெண்ணே உன்ன நினைக்கையிலே
மனசு வலிக்குதடி...

This Poem describes about a guy's feeling on his Lost Love...

No comments: