Tuesday, November 6, 2007

வெற்றிக்கொண்டாட்டம்!!

கரடுமுரடான சாலைகள்
எங்கும் பாறைகள்
பரவிக்கிடக்கும் காடுகள்
இவற்றை மாற்றிட
உழைத்த கைகளின் கொண்டாட்டம்!!

தன்னலம் கருதா கூட்டத்தின் கொண்டாட்டம்!!
வியர்வைக் கடலில் மிதக்கும் கூட்டத்தின் மகிழ்ச்சிக்கொண்டாட்டம்!!
பிறர்வாழ்வு ஒளிர்ந்திட தன்னை உருக்கும்
உழைப்பு மெழுகுவர்த்திகளின் உணர்ச்சிக்கொண்டாட்டம்!!
நாடு செழிக்கத்தன் உதிரத்தை சிந்திடும் கூட்டத்தின் கொண்டாட்டம்!!
சிதைந்த தேசத்தையும் உழைப்பால் உன்னதமாக்கும்
சிங்க கூட்டத்தின் கொண்டாட்டம்!!
தாழ்வு நீங்க உரிமையை வென்றெடுத்த
தன்மான சின்னத்தின் கொண்டாட்டம்!!
குருதி ஆறு ஓடிடினும்
உயிர் பிரிந்திடினும்
கொள்கை குன்றா கூட்டத்தின் கொண்டாட்டம்!!
உழைக்கும் மக்களின் கொண்டாட்டம்!!
எண்ணத்தால் உயர்ந்தோரின் கொண்டாட்டம்!!
சுதந்திரகாற்றை சுவாசிக்கும் கொண்டாட்டம்!!
சமத்துவத்தை பறைசாற்றும் கொண்டாட்டம்!!

மேதின கொண்டாட்டம்!!

இக்கொண்டாட்டத்தில்-

அழியட்டும் ஆணவச்சக்திகள்!
அழியட்டும் முதலாளித்துவம்!
அழியட்டும் தாழ்வுகள்!

வளரட்டும் சமதர்மம்!
வளரட்டும் பொதுநலம்!
ஓங்கட்டும் தொழிலாளர் ஒற்றுமை!!

This Poem says about the Importance of May Day!!
- ம.வீ. கனிமொழி

No comments: