Sunday, August 3, 2008

கடைசி முத்தம்

கட்டழகி அவள் மரணக்கட்டிலில்
கட்டியணைத்த கண்ணாளன்
வரவை எண்ணி
கண் அயராது
காத்திருந்தாள்!!

கருத்தில் நிறைந்திட்ட
கரிய மேனி கொண்ட
கனியமுதன் அவனும்
கண்ணின் கருமணியாய்
காத்திட்ட கனகவள்ளி
தன் இணையைக் காண
வேகமாய் வந்திட்டான்!!

காதல் அரும்பிய
தருணத்தில் சந்தித்த
கண்களின் ஒளி ,
கண்களின் ஒளி
மங்கிய காலத்திலும்
அன்பின் ஒளி குன்றாமல்
ஆசையின் ஒலி
நில்லாமல் நெஞ்சத்தில்
இருவருக்கும் ஒலித்தது!!

காதலின் வேகம்
காலத்தின் வேகத்தில்
குறைந்திடவில்லை
மூப்பு தந்த
உருமாற்றம் அகத்தின்
அன்பினை அழித்திடவில்லை!!

அவன் மெல்ல
குனிந்து தன்
குணமொழியின் கன்னம்தனில்
இதமாய் மெல்லிய
முத்தம் கொடுக்கையிலே,
முத்தத்தின் சத்தமும்
கேட்டிடும் முன்னே
முல்லை அவளின்
உடல் சில்லிட்டது!!

No comments: