Sunday, August 3, 2008

கடிதமொழி

இளமானே

மயக்கறு மயிலே

மாசில்லா குணமொழியே

குன்றா அன்பின் ஊற்றே

குயிலின் குரல் கொண்ட

குணாளன் எந்தன் குயில்மொழியே

நிறைவாய் வாழ்ந்திடலாம் நாமே

என்றும் என் நிறைமொழியே

தேனாய் பேசிடும் தேன்மொழியே

வெண்கல மணி ஓசையில்

சிரித்திடும் என் மணிமொழியே

செவ்விதழ் கொண்டே அமிழ்தை

தந்திடும் என் செம்மொழியே

என் வாழ்வே, என் உயிரில்

கலந்திட்ட கனிமொழியே

மலரின் மென்மை கொண்ட

பூமொழியே!!

அறிவாய் அறிவுரை வழங்கிடும்

என் மதிமொழியே

உன் அன்பின் அருள் வேண்டும்

எனக்கு என் அருள்மொழியே

உனை என்றுமே நேசித்திடும்

உன் மணிமொழியன்

என் அன்பினை

தமிழ்மொழி கொண்டே

விரித்திடும் கடிதமொழி இதுவே!!

No comments: