Sunday, August 3, 2008

குறை

குறைதனை குறைத்திடவே

உன் குறைதனை புரிந்திடு

மனித குறைகள் குறையாமல்

நட்சத்திரங்களாய் ஏராளம்

துணைவனின் அன்பில்

துணைவிக்கு குறை

துணைவியின் சமையலில்

துணைவனுக்கு குறை

குழந்தையின் படிப்பினில்

பெற்றோருக்கு குறை

பெற்றோரின் கண்டிப்பில்

குழந்தைக்கு குறை

உழைப்பாளியின் உழைப்பில்

முதலாளிக்கு குறை

முதலாளியின் பேராசையால்

உழைப்போர்க்கு குறை

வயலின் வறட்ச்சிக்கு

தண்ணீர் குறை

சமத்துவ சமாதானத்திற்கு

சாதியே குறை

மக்களின் ஒற்றுமைக்கு

மதமே குறை

மனிதனின் மூடத்தனதிற்கு

சிந்தனையே குறை

அறிவியலின் ஆராய்ச்சிற்கு

ஆன்மீகமே குறை

இயல்பாய் வாழ்ந்திட

நாணமே குறை

உழைத்து வாழ்ந்திட

சோம்பலே குறை

கனிவாய் பேசிட

கோபமே குறை

நிறைவாய் வாழ்ந்திட

குறையே தடை

குறைதனை குறைத்து

குறைப்படுதலை தவிர்த்து

குன்றிய வாழ்வினை

குன்றா வாழ்வாக்கிட

குன்றுபோல் நெஞ்சுரம்

குறையாமல் கொண்டு

குறையின்றிப் உழைப்போமே!!

No comments: