Sunday, August 3, 2008

என் தாய் தமிழ் நாட்டு காளைகாள்!!

என் தாய் தமிழ் நாட்டு காளைகாள்

எங்கெ உங்கள் மறத்தமிழனின் வீரம்

உங்கள் பொழுதினை திரையரங்குகள் முன்னும்

வீண் வாதத்திலும் வீணாக்கினீர்

அய்யகோ!! என் சொல்வேன்

நம் தாய் தமிழ் நாட்டின் பிள்ளைகாள்

நம் நாட்டின் நிலை அறிந்திட மனமில்லையோ

நம் இனம் ஒரு புறம் அழிவுறுவதை கண்டு

துடித்திடவில்லையா நெஞ்சம்?

பொறுமைக்கும் எல்லையுண்டு தோழனே

எல்லை தாண்டா போதிலும்

வாழ்வாதரம் தொடர மீன் பிடித்திடச்செல்லும்

நம் மீனவர் அய்யோ அங்கே சுடப்படுகின்றபோது

மனம் சுக்கல் நூறாய் வெடிக்கின்றதே

மறத் தமிழ் குழந்தைகாள்

உறக்கம் போதும்

சுருக்கென விழித்திடு

எங்கே உன் வீரம்?

எங்கே உன் போர்க்குணம்?

மாண்டிடும் நம் இனத்தினை மீட்கவே

தமிழனின் புகழ் தரணியில் நாட்டிடவே

புறப்படு தோழனே!!

போர் முரசு அறைந்தே புறப்படு

உன் முரசு ஒலியில் இன ஓநாய்கள்

ஓசையின்றி ஓடி ஒளியட்டும்

மாளவில்லை நம் வீரம்

கடைசி தமிழன் உள்ள வரை

இறுதிச் சொட்டு குறுதி

நிலத்தில் விழும் நேரத்திலும்

நம் இனத்தினை காத்திட

வேங்கை எனவே புறப்படு!!

No comments: