Sunday, August 3, 2008

தாலாட்டு

நாவினை அசைத்துப்பாடிடும்

தாலாட்டு தளிர் மொட்டினை

வளர்த்திடும் நீர் ஊற்று

வாழ்க்கையின் தத்துவத்தினை

தாராளமாய் பகன்றிடும் தாலாட்டு

வாழ்க்கையை எதிர்கொள்ளும்

விதத்தினை துணிவாய்

பாட்டில் பகன்றிடும்

தாலாட்டு

தாயின் கனிவை

தந்தையின் கண்டிப்பை

உறவுகளின் எண்ணங்களை

அறிவுடனே அளந்திடும்

தாலாட்டு

சுமையில்லா குழந்தைக்கு

இமைகளை சுமையாக்கித் தூக்கந்தனை

வரவழைத்திடும் என்

தாய் தமிழ்நாட்டின்

அற்புத அறிவுப்பாட்டு

வாழ்க்கைப்பாட்டு

தாலாட்டு

அதனைக் கேட்டு

நீயும் தலை ஆட்டு!!

No comments: