Sunday, August 3, 2008

வெற்றியே நீ மட்டும்

மனித ஆற்றலின்
தூண்டுகோலாய்
மனிதன் தோல்வி
கண்டு துவளாமல்
சாதனைகள் படைத்திட
துணைபுரியும் ஊன்றுகோலே!!
உறங்கும் மனிதர்
உடனே விழித்திட
உரமாய் விளங்கிடும்
உந்துசக்தியின் உறைவிடமே!!

உனை அடைந்திடத்தான்
உண்ணாமல் உறங்காமல்
உழைத்து வென்றிடும்
உன்னத உள்ளங்கள் எத்துனை?


கண்டுப்பிடிப்புகளின் தாயும் நீதான்
உனை அடைந்திட அலைந்தே
மனித சமூகம் அறிவுப்பெற்றது
தேடுதல் வேட்டையின்
பரிசும் நீதான்!!

உனை தன்வசம் கொள்ளத்தான்
எத்துனை போராட்டம்?
எத்துனை உயிரழப்பு?
எத்துனை மனக்கசப்பு?
எத்துனை போட்டி?
எத்துனை அழுக்காறு?

பல முறை தோற்பினும்-உன்
ஒரு வெற்றிக்கனி
தோல்வியின் சோகந்தனை
தூள் தூளாக்கிடும்!!

வரலாறுதனை புரட்டிப்பார்த்தால்
உனைப்பெற்று கம்பீர தோரணையால்
வலம் வந்த மனிதர்தான்
எத்துனை எத்துனை?

உன் தங்கையால் மனிதன்
சிதையுண்டு மனம் சிதறும்
நேரம் நீ மட்டும்
இல்லையெனில் எவ்வாறு
தேறிடும் மனிதம்??

நீ தரும் ஊக்கம்தான்
மக்களை விண்வெளி
தாண்டியும் சாதனை
புரிந்திட தயார் செய்கிறது!!

நீ தரும் உற்சாகம்தான்
இருளில் கிடந்த உலகம்
வெளிச்சம் பெற உதவிபுரிந்தது!!

உனை வாழ்நாள் முழுதும்
பெற்றிட கல்லறை காணும்வரை
கண்ணுறக்கம் இழந்தோர் பலர்!!

வெற்றிப்பெற்ற மனிதரும்கூட
மாண்டு போகின்றனர்- ஆனால்
வெற்றியே நீ மட்டும்
என்றுமே தோல்விகாணா
சரித்திரமாய் மனித
முன்னேற்றத்தின் அச்சாணியாய்!!

No comments: