அழகு மொழி பேசும் மழலைச்செல்வம்
ஆனந்த இன்பத்தின் ஊற்றாய் இசை
இயல்பாய் பூத்திடும் புன்னகை
ஈரம் நிறைந்த மண்ணின் வாசம்
உழைக்கும் மக்களின் நிறம்
ஊன்றுகோல் கொண்ட முதுமை
எங்கும் நிறைந்திடும் இயற்கையின் சிறப்பு
ஏற்றம் மிகுந்த மலைகள்
ஐயம் இல்லா வாழ்விணை
ஒன்றாய் வாழும் உலகம்
ஓடியே உழைத்திடும் மக்கள்
ஔவையும் வளர்த்த எம் தமிழ்
இஃது அனைத்தும் இருப்பின்
வாழும் காலங்கள் தோறும்
வாட்டம் தான் ஏது தோழா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment