வாழ்க்கை ஒரு முறைதான்
வாழ்ந்து பார்த்துவிடு!!
வானத்தின் உயரம்தனை
தாண்டி பார்த்துவிடு!!
சிகரம்தனை தொடலாம்
முயன்று வென்றுவிடு!!
பயமின்றி கடமைதனைச்செய்திட
என்றுமே உனை பழக்கிவிடு!!
கள்ளத்தனம் நமக்கு வேண்டாம்
வேரோடு பிடுங்கி எறிந்துவிடு!!
காதலும் போதைதான்
அளவாய் பருகிவிடு!!
மக்கள் நலனே இக்கனம்வேண்டும்
உழைத்து சிறந்துவிடு!!
அரசியலும் சாக்கடைதான்
கொள்கையால் வாழ்ந்துவிடு!!
பத்து முறை பாடை வாராது
துணிவுடன் அயராது போராடு!!
உணவும்கூட மறந்துவிடு
சுயமரியாதைபெற்று வாழ்ந்துவிடு!!
வாழ்க்கை ஒரு முறைதான்
வாழ்ந்து வென்றுவிடு!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment