தண்ணீரின் தாகம்
தண்ணீரால் தீரும்
இலட்சியத் தாகம்
தியாகத்தால் தீரும்
தாய்மையின் தாகம்
அரவணைப்பில் தீரும்
விடுதலை தாகம்
புரட்சியால் தீரும்
அன்பின் தாகம்
புரிதலில் தீரும்
அறிவுத் தாகம்
ஆராய்தலில் தீரும்
உயிரின் தாகம்
உழைப்பால் தீரும்
தீரும் என்பதே
தாகம் மீண்டும் தாக்கிடும்
என புரிந்திட்டே
தாகம்தனைத் தீர்க்க
தொகைதொகையாய்
வழிகல் தேடியே - உன்
தாகம் தீர்த்திடுவாய் மனிதா!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment