நாங்கள் மென்பொருள் வல்லுனர்கள்-ஆனால்
மனம் இறுகிப்போன வல்லூறுகள்!!
தாயின் சாவிற்கும் வர நேரமின்றி அழைபேசியில்
அழைத்தே தந்தையின் துக்கத்தை பகின்றிடும் மென்பொருள்
கனவான்கள்!!-எங்கள்
திருமணத்திற்கும் கூட ஒரு நாள் முன் விடுப்பு எடுத்திடும்
கடமையின் 'கல்'தூண்கள்!!
குழந்தை ஒன்று ஆர்வத்தால் கணிப்பொறி தொடுகையில்
அதன் புத்திக்கூர்மையை ரசிக்காமல் கணிப்பொறி
பழுதடைந்திடுமோ? என்றே குழந்தை மேல்
'வல்' எனவே விழும் மென்பொருள் 'வல்'லுனர்கள்!!
கல்லூரி நண்பன் பல நாள் கழித்து அழைத்தாலும்
வேலை காரணம் சொல்லி அனுப்பொழுதும்
மின்னஞ்சலில் மூழ்கிக்கிடந்திடும்
நாங்கள் மெ(மி)ன்பொருள் வல்லுனர்கள்!!
அஃறினைப் பொருள்களிடம்
பழகிப்பழகி பாசத்தின்
ஊற்றை வற்ற விட்டு
பந்தங்களை பரிதவிக்க விட்டு
சின்ன சின்ன ஆசைகளையும் அடக்கிக்கொண்டு
காலையும் மாலையும் இரவும்
கடினமாய் சிந்தித்து சிந்தித்து
கடிகார நேரம் கூட மறந்து போனவர்கள்
நாங்கள் மென்பொருள் வல்லுனர்கள்!!
மழலைமொழியினை கணிப்பொறியின் ஒலி
மங்கிய திரையில் தொலைத்தவர்கள்
நாங்கள் மென்பொருள் வல்லுனர்கள்!!
அமைதிப்பேச்சும் மெல்லிய புன்னகையும்
நாங்கள் எழுதிய நிரல் வேலை செய்தால் மட்டுமே!!
இல்லையெனின் கோபத்தினை குத்தகை எடுத்து
குழந்தையின் பிஞ்சு உள்ளத்தையும் வாட்டிடச் செய்திடும்
நாங்கள் மென்பொருள் வல்லுனர்கள்!!
வாழ்க்கையின் பாதியில் அவசர அவசரமாய்
இரத்தக்கொதிப்பாலும் இன்னும் பெயர் அறியா
நோயாலும் வாழ்க்கையை முடித்து கொள்ளும் நாங்கள்
பரிதாபத்திற்குரிய மென்பொருள் வல்லுனர்கள்!!
மனம் இறுகிப்போன வல்லூறுகள்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment