Sunday, August 3, 2008

என் தாய் தமிழ் மொழியே வணக்கம்!

என் தாய் தமிழ் மொழியே வணக்கம்!
உன் மேல் எனக்கு எப்பொழுதும் உண்டு கிறக்கம்!!
காரணம் நீ முத்தமிழின் ;கலைகளின் சுரங்கம்!!
உன் ஆற்றலை அழகினை கொஞ்சுமொழி நடையை
அறியாதவர் வாழ்வில் அடைவர் இறக்கம்-ஆனால்
அவர்களையும் உன்(அன்)பால் அணைத்துக் கொண்டு
அமுது படைத்திடும் உன் இரக்கம்!!
செம்மொழிகளில் நீ முதன்மை சதுக்கம்!!
உன் புகழ் பகன்றிட எங்களுக்கு என்றுமில்லை தயக்கம்!!
உயிர் உள்ள வரை உன் ஆற்றல் பற்றியே எங்கள் முழக்கம்!!

No comments: