Sunday, August 3, 2008

அஞ்சுக கண்மணியே!!

உனை கட்டிக்கொள்ள
மனம் இட்டுச்செல்ல-உன்
மணம் தூக்கிச்செல்ல
எனை வாட்டுதடி!!

உனை தட்டிச்சென்றே
என்னில் கரைத்துவிட
நெஞ்சில் மறைத்துவிட
உள்ளம் துடிக்குதடி!!

கண்ணில் நீயும் காதல் சொல்ல
என் உயிரும் பூத்துச்செல்ல
உன் நடையில் எனை இட்டுச்செல்ல
என் உயிர்தான் மயங்குதடி!!

கண்ணே எனைக் கட்டிக்கொண்டு
உன்னில் சேர்த்துக்கொண்டு
வாட்டம் போக்கிவிடு
என் அஞ்சுக கண்மணியே!!

No comments: