Sunday, August 3, 2008

அவள் நடந்து போகின்றாள்...

அவளிடம் பிற
பெண்கள் போல்
தளிர் மேனியோ
மயக்கும் கண்களோ
சிவந்த இதழ்களோ
பளிங்கு கன்னங்களோ
நீளக் கருங்கூந்தலோ
கொண்டவள் இல்லை!!

மேனியோ உணவில்லா
உழைப்பால் களைத்து
இளைத்து கருத்திருந்தது
கண்களோ சோகத்தின் வடிகாலாய்
இதழ்களோ தண்ணீர் காணா
பயிர் போல் வரண்டு இருந்தது
கன்னங்கள் பசியால் ஒட்டியிருந்தது
கூந்தலோ எண்ணெய் இல்லா
தேங்காய் நார்போல் காட்சியளித்தது

இத்துனை அழகின்மை
வெளித்தோற்றத்தில் தான்!!

ஆனால்!!

உள்ளத்தில் எப்படியும் வாழ்ந்திட
வேண்டும் என்ற நெஞ்சுரம் உண்டு!!
சில தன்னம்பிக்கை இல்லா
மாக்கள் பிச்சை எடுத்து வாழ்க்கை
நடத்துவது போல் அன்று!!

உண்ண உணவில்லையெனினும்
இரந்து உண்ணாமல்
உழைத்து வாழத்தான்
காலைக் கதிரோன்
எழும்முன் தலையில்
பாண்டினைச் சுமந்து
கட்டிட வேலைக்கு
கையில் கைக்குழந்தையுடன்
அந்தப் பெண்,
மனதில் தள்ளாட்டம்
இல்லா மங்கை,
நடந்து போகின்றாள்!!

No comments: